ஸ்ரீவைகுண்டம் பகுதிகளிலுள்ள பள்ளிகள், பஞ்சாயத்துகளில் குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தாசில்தார் சந்திரன் தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். இதில், வருவாய் ஆய்வாளர்கள் சிதம்பரம், அய்யனார் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கொங்கராயகுறிச்சி கேம்பிரிட்ஜ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் குடியரசு தினவிழா பள்ளி தாளாளர் பால்ராஜ் தலைமையில் நடைபெற்றது. பள்ளி முதல்வர் சுமதி, பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பஞ்சாயத்து தலைவர் ஆபிதாபானு தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.
விழாவில், பள்ளி மாணவ, மாணவியர்களின் நடனம், பிரமீடு அமைத்தல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், ஆசிரியை-ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், ஆசிரியை செல்லம்மாள் நன்றி கூறினார்.
ஆறாம்பண்ணை பஞ்சாயத்து அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல்காதர் தேசிய கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில், துணைத்தலைவர் அப்துல்கனி, வார்டு உறுப்பினர் இப்ராகிம், ஜமாஅத் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆறாம்பண்ணையிலுள்ள அராபத் நகர் பள்ளிவாசலில் முதல் முறையாக குடியரசு தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இதில், ஜமாஅத் நிர்வாகிகள், ஊர்பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கொங்கராயகுறிச்சி பஞ்சாயத்து அலுவலகத்தில் பஞ்சாயத்து தலைவர் ஆபிதாபானு கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். இதில், பஞ்சாயத்து செயலாளர் பிராங்கிளின், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பேட்மாநகரம் எம்.எம்.மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பள்ளி முதல்வர் பெல்சியா ரோஸி கொடியேற்றி வைத்தார். அதனைத்தொடர்ந்து மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், ஆசிரியை&ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆழ்வை மின்வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் உதவி மின்பொறியாளர் முருகன் தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார். இதில், மின்வாரிய பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கொங்கராயகுறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவிற்கு பள்ளி தலைமையாசிரியை பேச்சியம்மாள் தலைமை வகித்தார். கொங்கராயகுறிச்சி பஞ்சாயத்து தலைவர் ஆபிதாபானு தேசிய கொடி ஏற்றி வைத்தார். முடிவில், மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.