தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் புதிய டீனாக சென்னை அரசு பொது மருத்துவக் கல்லூரியின் மயக்கவியல் துறை பேராசிரியர் டாக்டர் இ.எபினேசர் ஜோயல் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அரசு மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மயக்கவியல் துறை பேராசிரியராகப் பணிபுரிந்து வந்த டாக்டர் இ.எபினேசர் ஜோயல் குமாருக்குத் தகுதியின் அடிப்படையில் வழக்கமான பணி உயர்வு வழங்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் புதிய டீனாக நியமித்துத் தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் டீனாகப் பணிபுரிந்து வந்த டாக்டர் ஜி.சிவக்குமார் அண்மையில் தனது அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்றதை அடுத்து ஏற்பட்ட காலிப் பணியிடத்திற்கு, தற்போது டாக்டர் இ.எபினேசர் ஜோயல் குமார் புதிய டீனாக நியமிக்கப்பட்டுப் பொறுப்பேற்க உள்ளார்.
புதிய டீன் நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ உத்தரவு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் விரைவில் தூத்துக்குடிக்கு வந்து முறைப்படி தனது புதிய பொறுப்பினை ஏற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


