செய்துங்கநல்லூர் அருகே வேன் பைக் மோதியதில் பாளை கல்லூரி மாணவர் பலியானார்.
ஏரல் பர்கன் தெருவை சேர்ந்தவர் சாதிக் மகன் ஆசிப்(20). இவர் பாளை சதக்கப்துல்லா அப்பா கல்லூரியில் அரபி இறுதி ஆண்டு படித்து வருகிறார். சாதிக்கு சொந்தமான நகை கடை ஏரலில் உள்ளது. நேற்று இரவு 7 மணி அளவில் கல்லூரியில் இருந்த இவர் ஏரலுக்குமோட்டார் பைக்கில் கிளம்பினார். இவருடன் ஏரல் வடக்கு பள்ளி வாசல் தெருவை சேர்ந்த பைசல்(18) உடன் வந்தார்.
இதற்கிடையில் கழுகுமலை அருகே உள்ள குலகட்டான் குறிச்சியை சார்ந்தவர் திருச்செந்தூர் சென்று சாமி கும்பிட்டு விட்டு திரும்பி கொண்டிருந்தனர். இரு வாகனங்களும் கருங்குளத்தினை அடுத்த புளியங்குளம் விலக்கில் நேருக்குநேர் பயங்கரமாக மோதின. இதில் ஆசிப் , பைசல் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே ஆசிப் உயிரிழந்தார். பைசல் உயிருக்கு போராடி நிலையில் பாளை அரசு மருத்துவ மனையில் சிகிச்கைக்காக சேர்க்கப்பட்டார்.
இது குறித்து விவரம் கிடைத்தவுடன் செய்துங்கநல்லூர் போலிஸ் இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன், சப் இன்ஸ்பெக்டர் சதீஷ், ரவிகுமார் உள்பட போலிசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆசிப் உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இது குறித்து செய்துங்கநல்லூர் போலிசார் வழக்கு பதிவு செய்து வேனை ஓட்டி வந்த கழுகுமலை முதலியார் மேற்கு தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் ராஜா(42). வை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பாக்ஸ்போடலாம்.
அடிக்கடி விபத்து ஏற்படுத்தும் குறுகலான சாலை
புளியங்குளத்தின் அருகே கடந்த 28 ந்தேதி காலை 5 மணிக்கு வேன் கார் மோதி தந்தை கள் பலியானார்கள். இன்று இரவு மீண்டும் அதன் அருகிலேயே மற்றொரு விபத்தில் கல்லூரி மாணவர் பலியானார். மிகவும் குறுகலான , வளைந்த இந்த சாலையில் பேரிகார்டு வசதி செய்து வாகனங்களை மெதுவாக செல்ல அறிவுருத்தினால் மட்டுமே விபத்தினை தடுக்க முடியும். எனவே நெடுஞ்சாலை துறையும் காவல் துறையும் இதற்கான நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.