செய்துங்கநல்லூர் பகுதியில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கொடியேற்று விழா. பார்வர்டு பிளாக் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் சுரேஷ் கொடியேற்றி வைத்தார்.
தேவர் ஜெயந்தி விழா மாநில முழுவதும் நடந்து வருகிறது. கருங்குளம் ஒன்றிய பகுதியில் பார்வர்டு பிளாக் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் சுரேஷ் கொடி யேற்றி வைத்து, இனிப்பு வழங்கினார். இவர் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து துவங்கி கருங்குளம், தெற்கு காரசேரி, சேரகுளம், தூதுகுழி, செய்துங்கநல்லூர், நாட்டார்குளம் உள்பட பல பகுதிக்கு சென்றார். அங்கு தேவர் படத்துக்கு மாலை அணிவித்தார்.
செய்துங்கநல்லூரில் நடந்த நிகழ்ச்சிக்கு வியாபாரிகள் சங்க பொருளாளர் பால்சாமி தலைமை வகித்தார். ராஜ் பாண்டியன், கார்த்திக் பாண்டியன், சுரேஷ், இந்து முன்னணி இசக்கி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் பிரவு வரவேற்றார். இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.