இராமனுஜம்புதூர் பகுதியில் விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் கம்பேனியினர் கைவிரித்த காரணத்தினால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இராமனுஜம்புதூர் பகுதியில் மிக அதிகமான விவசாயம் காணப்டுகிறது. வானம் பார்த்த பூமியான இந்த பகுதிக்கு மணிமுத்தாறு 3 வது மற்றும் 4 வது ரீச் மூலமாக பாசனம் நடந்து வருகிறது. இந்த பகுதியில் போதிய தண்ணீர் பாசனம் இல்லாத காரணத்தினால் நெல்பயிர்கள் அடிக்கடி தீய்ந்து போய் விடும். வாழை பயிர்கள் காற்றில் சாய்ந்து விடும். இதனால் அடிக்கடி விவசாயிகள் நஷ்ட ஈடு கேட்டு அரசிடம் போராடுவார்கள். ஆனால் அரசு இன்சூரன்ஸ் இருந்தால் மட்டுமே உங்களுக்கு இழப்பீடு கிடைக்கும் என தட்டிகழித்து வந்தனர். இதனால் விவசாயிகள் இன்சூரன்ஸ்செய்ய ஆரம்பித்தனர். இதுபோன்று இன்சூரன்ஸ் செய்தவர்களுக்கு கூட தற்போது அரசு நஷ்ட ஈடு வழங்க முடியாது என கடிதம் அனுப்பியுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து சேரகுளம் அருகே உள்ள இலுப்பைகுளத்தினை சேர்ந்த விவசாயி முத்துராமலிங்கம் கூறும்போது, நான் இரண்டு ஏக்கர் நிலத்தில் அம்பை 16 நெல் பயிரிட்டுஇருந்தேன். இதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டு இன்சூரன்ஸ் 360 ரூபாய் கட்டியிருந்தேன். அந்த ஆண்டு எங்கள் பகுதி தண்ணீர் இன்றி வறண்டது. இதில் பயிர்கள் கருகி விட்டன. நான் முறைப்படி இன்சூரன்ஸ் மூலமாக நஷ்ட ஈடு வேண்டி நின்றேன். கிடைக்கவில்விலை. இதனால் முலமைச்சர் தனிப்பிரிவு, மேதகு ஆளுநர் போன்றவர்களுக்கு கடிதம் அனுப்பினேன். இன்சூரன்ஸ் கம்பேனி காரர்கள் மேல் குறிப்பிட்ட காலத்திற்கு பயிர் இழப்பீடு இல்லாத காரணத்தால், காப்பீடு நிறுவனமானது இழப்பீட்டுத்தொகை வழங்க இயலாது என்று வங்கி மூலம் தெரிவித்துள்ளனர். இதனால் நாங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளோம். விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் என்ற பெயரில் எங்கள் பகுதியில் மட்டும் பல லட்சம் ரூபாய் பிரித்து உள்ளனர். தற்போது நஷ்ட ஈடு வழங்கவில்லை என்று கூறுவதால் இது திட்ட மிட்ட மோசடி போல தெரிகிறது. என்று அவர் கூறினார்.
2016 ல் இன்சூரன்ஸ் செய்தவர்களுக்-கு நஷ்டஈடு வழங்காத நிலையில் வருகிற 31 ந்தேதிக்குள் தற்போது செய்துள்ள சாகுபடிக்கு இன்சூரன்ஸ் செய்யுங்கள் என வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் கிடுக்குபிடி போட்டு வருகின்றனர். இது மேலும் விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


