செய்துங்கநல்லூரில் சாக்கடை அப்புறப்படுத்தப்படும் பணி முதல் கட்டமாக பள்ளி வாசல் தெருவில் துவங்கியது.
செய்துங்கநல்லூர் வளர்ந்து வரும் கிராமாகும். இந்த கிராமத்தில் மக்கள் தொகை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. நெருக்கடியால் குப்பைகள் மிக அதிகமாக சேருகிறது. அதோடு மட்டுமல்லாமல் புதன் கிழமை தோறும் சந்தையில் பல்லாயிரம் மக்கள் கூடுகிறார்கள். இந்த மக்கள் கூடும் இடத்தில் குப்பைகள் மிக அதிகமாக சேர்ந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் சாக்கடைகள் அதிகமாக காணப்படுகிறது. பள்ளி வாசல் தெரு, தென்னஞ்சோலை தெரு, புதுத்தெரு, மூப்பனார் தெரு உள்பட பல தெருக்களில் சாக்கடைகள் தேங்கி உள்ளன. இதையெல்லாம் அகற்ற வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா விடம் ª பாதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அவர், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பு லெட்சுமி, செய்துங்கநல்லூர் ஊராட்சி செயலர் சங்கரபாண்டியிடம் சாக்கடையை அப்புற படுத்தும் பணியை ஓப்படைத்தார்.
இவர்கள் சுகாதர பணியாளர்களை கொண்டு படிப்படியாக சாக்கடையை அகற்ற திட்டமிட்டனர். இதில் முதல் கட்டமாக பள்ளிவாசல் தெருவில் இருந்து மருதூர் மேலக்காலுக்கு செல்லும் சாக்கடை முழுவதையும் அகற்றினர். சுமார் 200 மீட்டர் தொலைவில் இங்கு அடர்ந்து கிடந்த சாக்கடை வண்டி மூலம் அள்ளி அகற்றப்பட்டது.
தொடர்ந்து அனைத்து பகுதியிலும் உள்ள சாக்கடைகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா நிருபர்களிடம் கூறினார்.
செய்துங்கநல்லூர் ஊராட்சிக்கு தற்போது சிறிய மோட்டார் வண்டி மூலம் குப்பை அகற்றப்பட்டு வருகிறது.இது போதுமானது அல்ல. வேகமாக குப்பையை அகற்ற பெரிய டிராக்டர் வண்டி தேவை. இது குறித்து பொதுமக்கள் கோரிக்கை நிலுவையில் உள்ளது. விரைவில் பெரிய டிராக்டர் வண்டி செய்துங்கநல்லூர் பஞ்சாயத்துக்கு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.