தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே சாயர்புரத்தில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டத்திற்கு சொந்தமான கல்வியியல் கல்லூரி இயங்கி வருகிறது.
இந்த கல்லூரியில் சுகாதார சான்று வழங்குவதற்காக ஏரல் வட்டார சுகாதார ஆய்வாளர் ஆழ்வாரப்பன் 25 ஆயிரம் ரூபாய் லட்சம் கேட்டுள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக கல்லூரியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் இன்று காலை ஆழ்வாரப்பனிடம் 25 ஆயிரம் ரூபாய் லட்சம் கொடுத்தபோது லட்ச ஒழிப்புத்துறையினர் ஆழ்வாரப்பனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் தீவிரமாக விசாரனை நடத்தி வருகின்றனர்.
கல்லூரியில் சுகாதாரச்சான்று வழங்க 25 ஆயிரம் ரூபாய் லட்சம் கேட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.