ச.ம.க செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் செய்துங்கநல்லூரில் நடந்தது.
ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட அவை தலைவர் எஸ்.ஆர். சங்கர், மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜ பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞரணி செயலாளர் சரத்கோபு வரவேற்றார். மாவட்ட செயலாளர் தயாளன் சிறப்புரையாற்றினார். செய்துங்கநல்லூரில் நவீன கழிப்பறை கட்ட வேண்டும், கிளாகுளத்தில் துண்டிககப்பட்ட இரயில்வே கிராஸை சீர் செய்ய உடனடியாக மங்கம்மாள் சாலையை திறககவேண்டும், நீதி மன்ற உத்தரவு படி அரசர்குளத்தில் ரேசன் கடை திறககவேண்டும், விவசாயிகளுககு நடுவை இயந்திரம் மானியத்தில் வழங்கவேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட விவசாய அணி சபரி செல்வம், உடன்குடி ஒன்றிய செயலாளர் சிவா, அவை தலைவர் பெருமாள், மாணவர் ஒன்றிய செயலாளர் சின்னதுரை, பார்வதி நாதன், இளைஞரணி துணை செயலாளர் ஜெபஸ்டின் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஒன்றிய துணை செயலாளர் அந்தோணி சிலுவை நன்றி கூறினார்.