ஒட்டபிடாரம் இடைத்தேர்தலையொட்டி செய்துங்கநல்லூரில் வாகன சோதனையை போலிசார் நடத்தினர்.
ஒட்டபிடாரத்தில் இடை தேர்தலுக்கான பிரச்சாரம் நடந்தது வருகிறது. செய்துங்கநல்லூர் அருகே உள்ள வி. கோவில் பத்து உள்பட 21 பஞ்சாயத்து கருங்குளம் ஒன்றியத்துக்குள் ஒட்டபிடாரம் தொகுதி எல்கை உள்ளது. எனவே இந்த பஞ்சாயத்து சம்பந்தப்பட்டவர்கள் அடிக்கடி செய்துங்கநல்லூர் வந்து செல்கின்றனர்.
எனவே செய்துங்கநல்லூர் காவல் நிலையம் முன்பு பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். தாசில்தார் நாக சுப்பிரமணியன் தலைமையில் சப்.இன்ஸ் பெக்டர் பேச்சிமுத்து, தலைமை காவலர் ஜோதி கிருஷ்ணன், அகிலா மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் கலந்துகொண்டனர். நேற்று காலை 8 மணிககு இவர்கள் சோதனையில் ஈடுபட்ட போது 3 1/2 லட்சத்து ரூபாய் கைபற்றபட்டது. தேனி பெரிய ஆணையார் தெரு, தேவசகாயம் மகன் செல்வராஜன்(48) என்பவர் வசம் இருந்து இந்த பணம் கைப்பற்றபட்டது. இந்த பணத்தினை ஸ்ரீவைகுண்டம் தாசில்தாரிடம் பறககும் படையினர் ஒப்படைத்தனர்.
செய்துங்கநல்லூரில் பறக்கும் படையினர் சோதனை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.