கருங்குளம் மேலூர் சபை கிறிஸ்து ஆலயம் 97 வது ஆலய பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை நடந்தது.
சி.எஸ்.ஐ. தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் கொங்கராயக்குறிச்சி கருங்குளம் மேலூர் சபை கிறிஸ்து ஆலய 97 வது பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை நடந்தது. முதல் நாள் தோத்திர ஆராதனை நடந்தது. சபை ஊழியர் ஜான்லீ ஜோசப் செய்தி அளித்தார். வி.பி.எஸ் மாணவ மாணவிகள் நிகழ்ச்சி நடந்தது. இரண்டாம் நாள் இரவு 7 மணிக்கு நற்செய்தி கூட்டம் நடந்தது. வல்லநாடு சபை ஊழியர் செல்வன், வசவப்பபுரம் சபை ஊழியர் ஏசுதாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மூன்றாம் நாள் திருநெல்வேலி விஜய் விடுதலை ஊழியர்கள் இரவு 7.30 மணி நற்செய்தி கூட்டம் நடந்தது. நான்காவது நாள் அறுப்பின் பண்டிகை 11 மணிக்கு நடந்தது. சேகரகுரு செல்வமணி நற்செய்தி அளித்தார். இரவு 7 மணிக்கு பீட்டர் பாபநாசம் செய்தி அளித்தார். ஐந்தாவது நாள் காலை 11மணிக்கு ஆலய பிரதிஷ்டை பண்டிகை நடந்தது. என்.ஜி.ஓ.காலனி சேகர குரு ஜீவராஜ் செய்திஅளித்தார். தொடர்ந்து மாலை 6 மணிக்கு அசன பண்டிகை நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை சேகரகுரு செல்வமணி, சபை ஊழியர் ஜான்லீ ஜோசப் சபை மக்கள் செய்திருந்தனர்.