தாய்மார்களின் மாங்கல்யத்தினை பறித்த எடப்பாடி அரசை வீட்டுக்கு அனுப்புங்கள் என வல்லநாட்டில் வைகோ பேசினார்.
ஒட்டப்பிடாரம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரவித்து வை.கோ பேசினார். அவர் பேசியதாவது.
தமிழகத்தில் மிகவும் முக்கிய பிரச்சனையாக குடிதண்ணீர் பிரச்சனை, சாக்கடை பிரச்சனை ஆகியவை உள்ளன. இந்த பிரச்சனைக்கு காரணம் உள்ளாச்சி தேர்தலை நடத்தாமல் இருப்பதே, ஆனால் அதை நடத்த விடாமல் தடுப்பது தமிழக அரசு. இன்று 80 லட்சம் பேர் தமிழகத்தில் வேலை இன்றி தவிக்கிறார்கள். இந்த அரசு ஊழல் மலிந்த அரசு. இந்த அரசு பல்வேறு ஊழல்கள் செய்த காரணத்தினால் மத்திய அரசை எதிர்க்க துணிச்சல் இல்லாத அரசாக மாறிவிட்டது. 300கோடி ரூபாய் ஆம்னி பஸ் ஊழல், 400 கோடி பருப்பு ஊழல், என பல ஊழல்களை இந்த அரசு செய்துவருகிறது. இவர்கள் அரசு கமிசன் அரசாக மாறி போன காரணத்தினால் பல்வேறு வேலை வாய்ப்பு தரும் கம்பேனிகள் தமிழகத்தில் காலுன்ற முடியாமல் மற்ற மாநிலத்துக்கு சென்று விட்டது. போர்டு கார் கம்பேனி இங்கே வராமல், ஜப்பான் தொழிற்சாலைகள் பல ஆந்திராவுக்கு சென்று விட்டது. பிரான்ஸ் தேசத்தில் இருந்து வந்த தொழில் சாலைகளும் தமிழகத்தினை கண்டுகொள்ளவில்லை. அதற்கு காரணம் இவர்களின் கமிஷன்வாங்கும் அவல நிலையே காரணம்.
நமது தாய்மார்கள் வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் தங்கத்தினை வங்கியில் மாங்கல்யத்தோடு வைத்து வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். கம்மல் , மூக்குத்தி உள்பட தங்க பொருள் எல்லாம் அடகு கடைக்கு போய்விட்டது. இதனால் தான் தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் முதல்வர் ஆன வுடன் நகை கடன் முழுவதும் தள்ளுபடி செய்வேன் என வாக்களித்துள்ளார். இன்றைக்கு கேபிள்டிவி 50 ரூபாயில் இருந்து 250 ரூபாய் ஆகி விட்டது. கேஸ் 350 ரூபாயில் இருந்து 900 ரூபாய் ஆகி விட்டது. எனவே தாய்மார்களின் மாங்கல்யத்தினை பறித்த இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப திமுகவை ஆதரியுங்கள். அன்பான பண்பான வேட்பாளர் வழக்கறிஞர் சண்முகையாவை ஆதரியுங்கள் என அவர் பேசினார்.
வசவப்பபுரம் மற்றும் வல்லநாட்டில் பேசிய அவர் ஓட்டபிடாரம் தொகுதியில் பல இடங்களுக்கு பேச சென்றார். அவருடன் தெற்குமாவட்ட செயலார் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, வேட்பாளர் சண்முகையா உள்பட பலர் உடன் சென்றனர்.


