செய்துங்கநல்லூர் அருகே உள்ள கிராமம் முத்தாலங்குறிச்சி. இவ்வூர் அம்மன்கோயில் அருகே உள்ள தாமிரபரணி ஆற்று படித்துறையில் மலைபாம்பு ஒன்று கிடந்துள்ளது. இதை இவ்வூரை சேர்ந்த அங்கப்பன் மகன் முருகன் (28) பார்த்தார். உடனே அவர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். வல்லநாடு வனக்காப்பாளர் பாலகிருஷ்ண்னன், வேட்டை தடுப்பு காவலர்கள் சங்கரலிங்கம், கந்தசாமி, சரவணன், சந்திரன் கொண்ட குழுவினர் முத்தாலங்குறிச்சி வந்து அங்கிருந்த மலைபாம்பை கைபற்றி வல்லநாடு மலையில் கொண்டு விட்டனர்.
கடந்த 1 வருடங்களில் இந்த ஊரில் மட்டும் நான்கு மலைபாம்புகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிட தக்கது.


