செய்துங்கநல்லூரை சேர்ந்த ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் மாவட்ட கண்காணிப்பாளர் அருண்பாலகோபலன் இப்பகுதியை ஆய்வு செய்தார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை 144 தடை உத்தரவு மத்திய அரசு சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றைய முன் தினம் தலைமை மருத்துவ செயலாளர் பீலா ராஜேஷ் திருநெல்வேலி மாவட்டத்தில் 22 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் உள்ளது என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை முதலே ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் செய்துங்கநல்லூரைச் சுற்றி போலிசார் பாதுகாப்பு வேலிகள் அமைத்து வருகின்ற பொதுமக்களை தடுத்து எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். செய்துங்கநல்லூரை சுற்றியிருககும் 8 கிலோ மீட்டர் வரை கிருமி நாசினியை தெளிகக சுகாதார துறை ஏற்பாடு செய்து வருகிறார்.
செய்துங்கநல்லூர் பகுதியை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் ஆய்வு மேற்கொண்டார். அவர் அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். செய்துங்கநல்லூரில் காலை 6 மணிமுதல் 12 மணி வரை மககள் அத்தியவாசியமான பொருள்களை சேகரிக்க ஊரடங்கு தளர்த்தப்பட்டது. மக்கள் முக கவசம் அணிந்து வந்து தேவையான பொருள்களை பெற்று சென்றனர். அதன் பின் கடைகள் முழுவதும் மூடப்பட்டது. இதனால் சாலைகள் வெறிச்சோடியது. செய்துங்கநல்லூர் செக்போஸ்ட் மூடப்பட்டது. இதனால் செய்துங்கநல்லூர் ஊருக்குள் வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.
செய்துங்கநல்லூரை சுற்றி மருந்து தெளிக்கும் பணியை மருத்துவ அதிகாரி சுந்தரி, ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி சுரேஷ்குமார், பஞ்சாயத்து தலைவர் செய்துங்கநல்லூர் பார்வதி நாதன், கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் சுப்புலெட்சுமி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பு லெட்சுமி செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ரகுராஜன்., செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து கிளார்க் சங்கரபாண்டியன், சுடலை உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அதன்பின்னர் அந்த பகுதியில் கிருமி நாசினி மருந்து தெருக்களில் தெளிக்கப் பட்டது. தொடர்ந்து சுத்தம் செய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


