செய்துங்கநல்லூரில் ஒருவருக்கு கொரானா தொற்று நோய் பரவியதால், திட்ட இயக்குனர் தலைமையில் கொரோனா நோய் தாக்குதல் குறித்த ஆய்வு நடந்தது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வரை 144 தடை உத்தரவு மத்திய அரசு சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் கோரோனா வைரசை ஒழிக்க பல்வேறு கட்ட பணிகள் நடந்து வருகிறது. நேற்று முன் தினம் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் 23 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் டில்லியில் நடந்த முஸ்லீம் மாநாட்டில் பங்கேற்றவர்கள்.
அவர்களில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரைச் சேர்ந்த ஒருவரும் இருந்தார். அவருக்கு திருநெல்வேலி மருத்துவமனையில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் செய்துங்கநல்லூரில் இன்று தூத்துக்குடி மாவட்ட திட்ட இயக்குநர் தனபதி தலைமையில் அதிகாரிகள், காவல்துறையினர், மருத்துவர்கள், ஊராட்சி அலுவலர்கள் உள்பட பல அதிகாரிகள் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர்.
இதில் மருத்துவ அதிகாரி சுந்தரி, ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி சுரேஷ்குமார், கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், பஞ்சாயத்து தலைவர் செய்துங்கநல்லூர் பார்வதி நாதன், கருங்குளம் ஒன்றிய ஆணையாளர் சுப்புலெட்சுமி, கூடுதல் ஆணையாளர் வெங்கிடாசலம், செய்துங்கநல்லூர் இன்ஸ்பெகடர் ரகுராஜன், வருவாய் ஆய்வாளர் இருதய மேரி, கிராம நிர்வாக அதிகாரிகள் செய்துங்கநல்லூர் சந்தனகுமார், தெற்குகாரசேரி பாண்டி பெருமாள், முத்தாலங்குறிச்சி கந்த சுப்பு, செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து கிளார்க சங்கரபாண்டியன், சுடலை உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அதன்பின்னர் அந்த பகுதியில் கிருமி நாசினி மருந்து தெருக்களில் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து சுத்தம் செய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.


