செய்துங்கநல்லூரில் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
கருங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் நல்லமுத்து தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் பரமசிவன், விவசாய சங்க தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் டாக்டர் கலீல் ரகுமான், தோணி அப்துல் காதர், பூல்பாண்டி, கொம்பையா பாண்டியன், காஜா முகைதீன், சிவாஜி, சுப்பையா கண்ணன், வேல்முருகன், பட்டி இசக்கி, கால்வாய் நம்பி பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.