
செய்துங்கநல்லூரில் கனிமொழி எம்.பி. மூலமாக செய்துங்கநல்லூரில் நூலக கட்டிடம் கட்ட கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செய்துங்கநல்லூர் கிராம சபை கூட்டம் எஸ்.என்.பட்டியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன் தலைமை வகித்தார். பார்வையாளராக உதவி திட்ட அலுவலர் சாந்தி, ஆணையாளர் சுப்புலெட்சுமி, கூடுதல் ஆணையாளர் வெங்கிடாசலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் செய்துங்கநல்லூரில் உள்ள நூலக கட்டிடம் மிக மோசமான நிலையில் உள்ளது. மேலும் அரசு போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி மைய கூட்ட அரங்கிற்கு கட்டிடம் இல்லை. எனவே கனிமொழி எம்.பி. இந்த நூலகத்துக்கு கட்டிடம் கட்டிதர இசைந்துள்ளார். அந்த கட்டிடத்துக்கு பொதுப்பணித்துறை மூலமாக இரண்டு மாடி கட்டிடமாக எஸ்டிமெண்ட் தயாரித்தல் உள்பட பணியை பஞ்சாயத்து மூலம் செய்து கொடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, கனிமொழி எம்.பியிடம் ஓப்படைக்க பஞ்சாயத்து தலைவர் பார்வதிநாதன் தலைமையில், விவசாய சங்க தலைவர் குமார், அப்துல் காதர், அலிபேக் மற்றும் நூலகர் லெட்சுமணன், வாசகர் வட்ட தலைவர் திருமலை நம்பி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
செய்துங்கநல்லூரில் பொதுக்கழிப்பிடம் கட்ட இடம் தேர்வு செய்வது, குப்பைகளை அகற்ற புதிய குப்பை லாரி பஞ்சாயத்து வாங்குதல், கூடுதலாக துப்புறவு பணியாளர்கள் நியமனம் செய்தல், செய்துங்கநல்லூரை பேரூராட்சியாக உயர்த்துதல் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரி சந்தானகுமார், தலையாரி சோமசுந்தரனம், பாளையங்கோட்டை சேவியர் கல்லூரில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் பிரின்ஸி, பஞ்சாயத்து உறுப்பினர் அபுபைதா, பட்டுராஜா, முருகன், பொன்னையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.