தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கு காரசேரியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளர் கண்ணன் தலைமை வகித்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
அதே போல் கருங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிங்கத்தாகுறிச்சி, பூவாணி, நாணல்காடு, கால்வாய், மளவராயநத்தம் என அனைத்து கிராமங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


