வடகிழக்கு பருவமழை தற்போது துவங்கியுள்ளது. இந்நிலையில் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தலின்படி அனைத்து துறை அதிகாரிகளும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் நேற்று பெய்த மழையில் நடராஜன் என்பவரின் வீட்டு ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்நிலையில் அதற்காக நிவாரண தொகையான 4500 ரூபாயயை செய்துங்கநல்லூர் வருவாய் ஆய்வாளர் இருதயமேரி மற்றும் செய்துங்கநல்லூர் கிராம நிர்வாக அதிகாரி சக்திவிக்னேஷ் ஆகியோர் நடராஜனின் வீட்டிற்கே சென்று வழங்கினார்கள்.
மழையில் சேதமடைந்த வீட்டிற்கு 24 மணி நேரத்தில் நிவாரணம் வழங்கிய வருவாய்துறையினரை அனைவரும் பாராட்டினார்கள்.