குருபெயர்ச்சி விழா மற்றும் தாமிரபரணி மகா புஷ்கர இரண்டாம் ஆண்டு விழா முத்தாலங்குறிச்சி குணவதி அம்மன் கோயில் நதிக்கரையில் நடந்தது. விழாவையட்டி குணவதி அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் ஆராதனை நடந்தது. பின் புனித நீர் ஊர்வலமாக எடுத்து சென்று தாமிரபரணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜ சுந்தர்,எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, கிராம நிர்வாக அதிகாரி கந்தசுப்பு, சப் இன்ஸ்பெக்டர் முகம்மது பைசல், காவலர் இசக்கி முத்து கிராம உதவியாளர் முத்தாலங்குறிச்சி பாலகிருஷ்ணன், கொங்கராயகுறிச்சி ஆனந்த பத்பநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர் . அர்ச்சகர்கள் சுந்தரகம்பர், சேகர் கம்பர் பூஜைகளை செய்தனர்.
அதன் பின் முத்தாலங்குறிச்சி வாலிபர்களோடு ஸ்ரீவைகுண்டம் தாசில் தார் கோபாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ராஜசுந்தர் ஆகியோர் கலந்துரையாடினர். போட்டி தேர்வில் கலந்துகொள்வது எப்படி? என்பது உள்பட பல பிரச்சனைகளை எடுத்துக்கூறி உற்சாகப்படுத்தினர்.
அதன் பின் தாமிரபரணியை காப்போம் என உறுதி மொழி எடுக்கப்பட்டது. நதியின் முக்கியத்துவம் குறித்து வாலிபர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அண்ணாமலை, செந்தில் உள்பட சமூக ஆர்வலர்கள். செய்திருந்தனர்.