பெரும் பாலுமே எழுத்தாளர்கள் என்றால் இலக்கிய கூட்டம் நடத்துவதிலேயே ஆர்வம் காட்டுவார்கள். அதிலும் 60 வயதை கடந்த எழுத்தாளர்கள் ஜோல்பை சகிதம், மூக்கு கண்ணாடி அணிந்துக்கொண்டு, தனது சட்டை பையில் பேனா வைத்துக்கொண்டு இலக்கிய கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்வதைதான் வழக்கமாக கொண்டிருப்பார்கள். அப்படியே சமூக சேவை செய்தாலும், தன்னுடைய சிஷ்யர்களை பணி செய்யவிட்டு, தாங்கள் மேற்பார்வை பார்த்துக்கொள்வார்கள். ஆனால் இங்கே ஒரு எழுத்தாளர், மற்றும் திரைப்பட வசன கர்த்தா தனது சொந்த ஊரில், தனி ஆளாக நின்று அங்குள்ள குளத்தினை தினமும் சுத்தப்படுத்துவதே தன்னுடைய தலையாய கடமையாக செய்து வருகிறார். இவர் பரம்பரை பண்க்காரரும் இல்லை. கூலி வேலை செய்து கொண்டு வாடகை வீட்டில் வசிக்கும் இந்த எழுத்தாளரை சந்திக்க கன்னியாகுமரி மாவடடம் சரலூர் சென்றோம்.

சரலூர் ஜெகன் என்ற பெயரில் கிட்டத்தட்ட தனது 20வயதில் எழுத துவங்கி துவங்கி கிட்டத்தட்ட 43 வருடங்களாக எழுத்துப்பணியில் இருந்து வருகிறார் இவர். இரத்த தானம் பற்றி விழிப்புணர்வு இல்லாத காலத்தில் இருந்தே அதாவது 43 வருடங்களாக குருதி கொடை கொடுத்தல் , மரக்கன்று நடுதல் , பிளாஸ்டிக் பொருளை அகற்றுதல் என தனது ஓய்வு நேரத்தில் சுற்றிக்கொண்டே இருப்பவர். மிகப்பெரிய விழிப்புணர்வை இந்த நாட்டில் ஏற்படுத்த வேண்டும் என தனி ஆளாக தொடர்ந்து 1 வருடமாக தற்போது நீர்நிலையை தூய்மைப்படுத்தி வருகிறார்.
இவர்¢ நம¢ம¤டம¢ பேசினார். “தினமும் காலையில் 4 மணிக்கெல்லாம் நான் எழுந்து விடுவேன். என் வீட்டில் இருந்து வடக்கு கோணம் அருகில் உள்ள அனந்தன் குளம் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு நடந்தே வருவேன். தினமும் காலை 6 மணிக்கெல்லாம் என் பணிதுவங்கி விடும் சுமார் 8 மணி வரை சுத்தப்படுத்தும் பணியை செய்துக்கொண்டே இருப்பேன். அங்கு கிடக்கும் பிளாஸ்டிக் கழிவு, பாட்டில்கள், பிளாஸ்டிக் பாட்டில்களை பொறுக்கி ஒரு சாக்கு பையில் அள்ளி வெளியே கொண்டு வந்து கொட்டுவேன். இந்த பணி செய்வதால் எனக்கு வாழ்வியல் நோய்களான சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்றநோய்கள் இதுவரை என்னை தாக்கவில்லை. என்னுடைய உடல் உழைப்பு நோய்களை விரட்டி விட்டது என்பது எனக்கு சந்«த்£சம் தான். நான் குளத்தினை துப்புறப்படுத்துகிறேன். என் உழைப்பு என் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது.

நிறைய பேர் உதவி கேட்டு வருவார்கள். என்னால் பண உதவி செய்ய இயலாது. எனவே எனது உடல் உழைப்பை மூலதனமாக வைத்து மக்களுக்கு சேவையாற்றி வருகிறேன். விளிம்பு நிலை குடும்பத்தில் பிறந்த நான் இதுவரை விழிம்பு நிலையிலேயே உள்ளேன். ஆனாலும் இப்பணி செய்வது மனதுக்கு சந்தோசமாக உள்ளது.
வாழ்தல் என்பது வரவை ஈட்டுவது , குடும்பத்திற்காக உழைப்பது என்பது மட்டும் அல்ல. அவற்றையும் தாண்டி மக்களுக்கு சேவை செய்வது தான். இந்த சேவைதான் எனக்கு மனநிறைவை தருகிறது. இயற்கை சார்ந்த வேலைகளை செய்வதில் எனக்கு பேரானந்தம். எனது மனதில் இந்த விதை தோன்ற எனது தந்தை தங்கையா தான் காரணம். அவர்தான் இயற்கையை காப்பாற்ற வேண்டும் என்ற விதையை என் மனதில் விதைத்தார். அதைத்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.
நான் சிறுவயதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றிக்கொண்டிருக்கும், இங்குள்ள நீர் நிலைகள் அழகாய் இருக்கும். நீராதாரம் சுத்தமாக இருக்கும். இவையொல்லாம் தற்போது என் கண் முன்பே அழிந்து கொண்டிருக்கிறது. குப்பையும் , பிளாஸ்டிக் பொருளும், காலி மது பாட்டில்களும் நிரம்பி வழிகின்றன. இதை என்னால் சீரணிக்க முடியவில்லை. வடக்குக் கோணம் அருகில் உள்ள அனந்தன்குளமும் குப்பைகளால் நிரம்பி வழிகிறது. இதை பார்த்து என் மனது பதைபதைத்து போனது. அதனால் தினமும் அந்த குளத்தினை சுத்தப்படுத்த முடிவெடுத்தென். அனந்தன் குளத்திற்கு தண்ணீர் வரும் அனந்தன்கால்வாயில் மக்கள் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுக்கிறார்கள். இங்குள்ள படகு குழாம் பயன்பாட்டில் இல்லை. அங்கே மது பிரியர்கள் சங்கமித்து குடித்து விட்டு வீசியெறியும் மதுபாட்டில் மலைபோல் குவிகிறது. இதை பார்த்த மனம் பதைபதைத்து போனேன். எம் பூமி எவ்வளவு அழகானது. இப்போது குப்பையும் குவியலுமாக இருக்கிறதே என எண்ணினேன். என்னால் எல்லா இடத்தினையும் சுத்தம் செய்ய இயலாது. ஆகவே அனந்தன் குளத்தினை மட்டும் தேர்வு செய்தேன். கடந்த 1 வருடகாலமாக இந்த பணியை மிகச்செவ்வன செய்து வருகிறேன். இங்கு கிடக்கும் பாட்டில்களை பொறுக்கி கொண்டு செல்லும் என்னை சிலர் பாட்டில் பொறுக்கி பழைய விலைக்கு விற்கும் மனிதனாக நினைத்துக்கொள்வார்கள். நான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை.

நான் செய்யும் பணி மூலம் மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நினைத்தேன். என்னுடைய முகநூல் பக்கத்தில் தினமும் இந்த தூய்மை பணி குறித்து பதிவிட்டு வருகிறேன். இதனால் இளைஞர் சமுதாயத்தினர் ஆங்காங்கே என்னைப்போல இப்பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இதோடு மட்டுமல்லாமல் என்னை பல இடங்களுக்கு அழைத்து கௌரவிக்கிறார்கள். நினைவு பரிசு வழங்குகிறார்கள். அவர்களிடமெல்லாமல் நான் சொல்வது உங்களால் இயன்ற பணியை இந்த பூமியில் செய்யுங்கள் என்பது மட்டும் தான்.
என்று அவர் கூறினார்.
சரலூர் ஜெகன் கடந்த 1988 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு ஊடகங்களில் எழுதிக்கொண்டிக்கிறார். மழைத்துளிகள், பாதை ஒன்று பாதச்சுவடுகள் 44, இடம் பெயரா நீர்ப்பறவைகள் என்னும் மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். காக்காச்சி, சப்பட்ட, பாண்ட என்னும் மூன்று வட்டார வழக்கு மொழி நாவல்கள் மற்றும் வழித்தடங்கள் என்னும் கட்டுரைத் தொகுப்பு உள்பட இதுவரை 7 நூல்களை எழுதியுள்ளார். சமீபத்தில் வெளிவந்த “பத்து தல” என்ற திரைப்படத்தில் வசன கர்த்தாவாகவும் இவர் பயணித்து உள்ளார்.

இதுவரை 102 முறை ரத்தத்தானம் செய்து வருகிறார். இவரது ரத்தப்பிரிவு பி நெகட்டிவ் எனும் அரிய வகை ரத்தமாகும். தன்னுடைய 63 வயதை கடந்தும் கூட ரத்த தானம் வழங்கி குருதி கொடையாளர் பட்டத்தினை பெற்றவர். இவர் வாழ்வில் நடந்த ஒரு சுவையான சம்பவத்தினை நம்மிடம் சொல்லி பெருமை பட்டுக்கொண்டார். 1991 ல் கோட்டார் அரசு மருத்துவ மனையில் ஒரு பெண்ணுக்கு பிரசவத்தின் போது ரத்தம் வழங்கியுள்ளார். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. 2013 ல் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அந்த பெண் குழந்தை பெரியவளாகி அவளுக்கு பிரசவ காலத்தில் இவர் அவளுக்கு ரத்தம் வழங்கியுள்ளார். இரண்டு தலை முறைக்கு ரத்தம் கொடுத்த பெருமைக்கு சொந்தக்காரர் இவர்.
1 வருடத்தினை தாண்டியும் அனந்தன் குளம் சுத்தப்படுத்தும் பணி மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. இவரைபாராட்டுவதோடு, இவரைபோலவே நாமும் நமது வீட்டுக்கருகில் உள்ள நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் . இந்த 63 வயது இளைஞர் செய்யும் பணியை ஒவ்வொரு இளைஞர்களும் செய்ய வேண்டும். அப்போதுதான் அழகான நமது புண்ணிய பூமியை அழிவில் இருந்து மீட்டெக்க முடியும்.


