கொங்கராயகுறிச்சி சட்ட நாதர் ஆலயத்தில் 100 வருடங்களுக்கு பிறகு கும்பாபிசேகம்செங்கோல் மட ஆதினம் கலந்து கொண்டார்.
தென்னகத்து சீர்காட்சி என போற்றப்படும் கொங்கராயகுறிச்சி மிகவும் பழமையான சட்டநாதர் ஆலயத்தில் சுமார் 100 வருடங்களுக்கு பிறகு கும்பாபிசேகம் நடந்தது. இந்த கும்பாபிசேகத்தினை செங்கோல் மட ஆதினம் துவக்கி வைத்தார்.
கொங்கராயகுறிச்சி சிவன்கோயில் பழமை வாய்ந்தது. நவலிங்கபுரங்களில் இந்த தலம் இரண்டாவது தலம். இங்கு சட்டநாதர் சிறப்பாக காட்சித்தருவதால் தென்னக்கத்து சீர்காழி என்று போற்றப்படுவதுடன் தேய்பிறை அஷ்டமி மிகச்சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. இங்குள்ள பொன்னுறுதி அம்மன் சமேத வீரபாண்டீஸ்வர் கேட்டவரம் தரும் பெருமானாக இருப்பதால் இங்கு தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்துவருகிறார்கள்.
சுமார் 50 வருடங்களுக்கு முன்பு ஆற்று மணலில் புதைந்து கோயிலாக கொங்கராயகுறிச்சி சட்டநாதர் ஆலயம் இருந்தது. இந்த ஆலயத்தினை மணலை தூர் வாரும் பணியில் பல்வேறு உழவாரப்பணிகளை சேர்ந்த சிவனடியார்கள் மேற்கொண்டு வந்தனர். இதன் காரணமாக தற்போது திருப்பணி முடிந்து கும்பாபிசேக பணிகள் சிறப்பாக நடந்தது. கிட்டத்தட்ட சுமார் 100 வருடகாலமாக இந்தக்கோயிலில் கும்பாபிசேகம் நடைபெறவில்லை என பக்தர்கள் கூறுகிறார்கள். இந்த ஆலயத்தில் தற்போது கும்பாபிசேகம் நடந்தத. இதையொட்டி கடந்த 6 ந்தேதி முதற்கால யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிசேக பணி துவங்கியது. தொடர்ந்து இரண்டு, மூன்றுகால பூஜைகள் நடந்தது. நான்காம் கால யாகசாலை பூஜை முடிந்து 8 ந்«தி காலை கடம் புறப்பாடு நடந்தது. அதன் பின் காலை 7.35மணிக்கு விமான மகா கும்பாபிசேகம் நடந்தது. தொடர்ந்து மூலாலயம் மற்றும் பரிவார தெய்வங்களக்கு மகா கும்பாபிசேகம் தீபாராதனை பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

திருக்காயிலாயப் பரம்பரை செங்கோல் மட 103 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீசிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள் தலைமை வகித்தார். உமையொருபாக நெல்லை ஆதின இளவரசு முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் பார்த்தீபன், கோயில் அறங்காவலர் தியாகராஜன், ஆலய ஆய்வாளர் பூ, நம்பி, செயல் அலுவலர் கோவல மணிகண்டன், முத்தாலங்குறிச்சி சிவன் கோயில் அறங்காவலர் காமராசு உள்பட பலர் கலந்துகொண்டனர். கும்பாபிசேக ஏற்பாடுகளை சிவஸ்ரீ குணசேகரன் பட்டர், கோயில் அர்ச்சகர் சிவராமன் ஐயர் மற்றும் அர்ச்சகர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் திருப்பணி செய்தவர்களுக்கு செங்கோல் மட ஆதினம் விருது வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து அன்னதானம் நடந்தது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் தியாகராஜன் தலைமையில் ஸ்ரீசட்டநாதர் குல தெய்வ பக்த மகா ஜனங்ள், அனைத்து உழவாரப்ப பணி சிவனடியார்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


