நாட்டார்குளம் புனித சூசையப்பர் ஆலயத்தில் மக்கள் ஓன்று கூடி மாட்டுப்பொங்கல் நிகழ்ச்சியை கொண்டாடினர்.
செய்துங்கநல்லூர் அருகே உள்ள நாட்டார்குளத்தில் புனித சூசையப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் வருடந்தோறும் பொங்கல் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டும் பொங்கல் விழா நடந்தது. பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஊர் மக்கள் அனைவரும் ஒன்று கூடி தனிதனி குழுவாக சேர்ந்து பொங்கலிட்டனர். அவர்கள் கரும்பு உள்பட பல பொருள்களை கொண்டு வந்து, ஆலயத்தில் வைத்து ஜெபம் செய்தனர். இதையொட்டி ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை ஆலயத்திற்கு கொண்டு வந்தனர். இதற்கான சிறப்பு திருப்பலி நடந்தது. அதன் பின் மாட்டு ப்பொங்கல் வைத்து கால்நடைகளுக்கு நன்றி கூறினர். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட மாடுகளை விவசாய பெருமக்கள் அலங்கரித்து ஆலய வளாகத்திற்கு அழைத்து வந்தனர். பின் கால்நடைகள் அணி வகுத்து மீண்டும் வீட்டுக்கு சென்றது. பங்குதந்தை இருதயசாமி துவக்கி வைத்தார். இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.