நெல்லை ஜமீன்கள் – முத்தாலங்குறிச்சி காமராசு

400.00

Description

நல்லம நாயக்கர் தனது படைவீரர்களை அழைத்துக் கொண்டு விஜயநகரம் என்ற ராயவேலூர் சமஸ்தானத்திற்கு சென்றார். அங்கு அவர் மன்னர் சம்புவை சந்திக்க வேண்டும். அவரை சந்திப்பது சாதாரண காரியம் அல்ல. பல காவல்களை கடக்க வேண்டும்.

கோடிலிங்க கோயில் தெற்கு வாசலில் சோமன் என்ற மாவீரன் தனது சகோதரர்கள் எட்டு பேருடன் காவல் புரிந்து வந்தார். யாரும் வெல்ல முடியாத பலசாலியாக இருந்தார். அவரை கடந்து செல்ல வேண்டுமென்றால் சாதாரண காரியம் அல்ல.

எனவே நல்லமனு நாயக்கர் சோமன எதிர்த்து சண்டையிட்டார். இருவருக்கும் பயங்கர சண்டை நடந்தது. அதில் சோமன் பலத்த காயத்துடன் தோல்வியுற்றார்.

சோமன் இறக்கும் தருவாயில் நாயக்கரை கூப்பிட்டார். என்னை வென்ற நீ பெரிய வீரன் தான். எனது உயிர் போய்விடும். இதுவரை எனது தம்பிகள் எட்டு பேரையும் நான்தான் காப்பாற்றி வந்தேன். அவர்களுக்கு வெளி உலகம் தெரியாது. எனவே அவர்கள் எல்லோரையும் நீதான் காப்பாற்ற வேண்டும் என்றார்.

சோமனே கவலைப்படாதே, உன் தம்பியை எட்டு பேரையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். இன்றிலிருந்து நீ எனது எட்டு தம்பிகளுக்கும் அப்பன் என்று சொல்லிவிட்டு அப்படியே சாய்ந்து விட்டார். உடனே உயிர் பிரிந்தது.

எட்டு பேருக்கும் அப்பன் என்ற பெற்ற பெயர் பெற்ற நாயக்கர் எட்டப்பன் என்று அழைக்கப்பட்டார். அதன் பிறகு வந்த ராஜாக்கள் எட்டப்பன் என்று அழைக்கப்பட்டார்கள்.