தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான திரு. P. மதன்ராஜா MLA அவர்களின் அறிவுறுத்தலின்படி, வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் (மியான் பள்ளி) நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு. முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சி நிர்வாகிகள் முகாமில் பங்கேற்று பணிகளை பார்வையிட்டனர்.
மேலும், முகாமில் பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பில் காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.


