
கருங்குளம் அருகே உள்ள அரசர்குளத்தில் ஏழைகளுக்கு இலவச பொருள்களை கவுன்சிலர் வழங்கினார்.
அரசர்குளம் பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு வைத்து நடந்த நிகழ்ச்சிக்கு வல்ல குளம் பஞ்சாயத்துத் தலைவர் கமலம் கிருஷ்ண குமார் தலைமை வகித்தார். எண்ணாயிரத்தான் முன்னிலை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் மாடத்தி ஏழை எளிய மக்களுக்கு இலவச பொருள்கள் வழங்கினார்.
இதில் 50 நபர்களுக்கு அரிசி, கோதுமை மாவு, காய்கறிகள், பருப்பு, சர்க்கரை, அப்பளம், பிஸ்கட் உள்படப் பல பொருள்களை வழங்கினார். நிகழ்ச்சியில் முனியாண்டி, ராமகிருஷ்ணன் உள்பட இளைஞர்கள் கலந்துகொண்டனர்.