செய்துங்கநல்லூர் அருகே உள்ள வி.கோவில் பத்து பஞ்சாயத்தில் ஏழை மக்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டது.
வி.கோவில்பத்து பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்துத் தலைவர் கொம்பன் தலைமை வகித்தார். வழக்கறிஞர் செல்வ பவளகண்ணன் முன்னிலை வகித்தார்.
ஜோஸ்மெட்ரிக் மழலையர் பள்ளி தாளாளர் ஒ.பி.முஸ்தபா இலவச அரிசியை வழங்கினார். சுமார் 40 பேருக்கு உதவி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் மாரியப்பன், வார்டு உறுப்பினர் இசக்கி, பஞ்சாயத்து எழுத்தர் ராமலட்சுமி, சிந்தாபாய், பரமசிவன் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.