தூத்துக்குடி முத்தையாபுரம் அருள்மிகு ஸ்ரீ முக்கூடல் மாடசாமி திருக்கோவிலில், மகா கும்பாபிஷேக விழா மற்றும் கொடை விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
உலக மக்கள் நலன் பெறவும், விவசாயம் செழிக்கவும், சுத்தமான காற்றும் நீரும் கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதல்களுடன் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ முக்கூடல் மாடசாமி, ஸ்ரீ மாடத்தி அம்மன், ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ காடோடி மாடசாமி மற்றும் ஸ்ரீ சப்பாணி மாடசாமி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடபெற்றன. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் சிறப்பான முறையில் செய்திருந்தனர். இந்நிகழ்வில் ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் கணக்காளரும், தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்க மாநிலத் தலைவருமான மருதப்பெருமாள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜையைச் சிறப்பாக நடத்தினார்.


