தூத்துக்குடியில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் 2026ம் ஆண்டிற்கான காலண்டர் வெளியிடப்பட்டது.
தூத்துக்குடி மாநகர் மாவட்ட தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் காலண்டர் வெளியிடப்படும். இந்நிலையில், 2026ம் ஆண்டிற்கான வண்ண மாத காலண்டரை இன்று மாநகர் மாவட்ட தலைவர் சக்தி. ஆர்.முருகன் புதிய காலண்டரை வழங்க ஏஎஸ்பி மதன் பெற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து சங்க உறுப்பினர்களுக்கு காலண்டர் மற்றும் டைரிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சங்க பொருளாளர் கே.ஞானதுரை, மூத்த பத்திரிக்கையாளரும் கெளவர தலைவருமான குமாரவேல்,புரவலர் மருத்துவர் வேம்பு கிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் இமானுவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.


