சாத்தான்குளம் அருகே முன் விரோதம் காரணமாக விவசாயியை கம்பால் தாக்கியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள வடலிவிளையைச் சேர்ந்த தங்கப்பாண்டி மகன் பன்னீர் செல்வம் (31). விவசாயியான இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மந்திரகுமார் (36) என்பவருக்கும் பிரச்னை காரணமாக முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பன்னீர் செல்வம், அங்குள்ள பகுதியில் மாடு மேய்த்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வநத மந்திரகுமார் அவரை அவதூறாக பேசினார். பன்னீர் செல்வம் தட்டி கேட்டதில் ஆத்திரமடைந்த மந்திரகுமார், அவரை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதில் காயமடைந்த பன்னீர் செல்வம், சாத்தான்குளம் அரசு மருததுவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின பேரில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்டீபன் வழக்குபதிந்து மந்திரகுமாரை நேற்று கைது செய்தார்.


