தூத்துக்குடியில் குழந்தை பாதுகாப்பு உதவி எண் 1098 குறித்த விழிப்புணர்வு பதாகையை மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வெளியிட்டார்.
தூத்துக்குடியில், பள்ளி குழந்தைகளுக்கு அவசர உதவி எண் 1098 குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு ரோட்டரி இன்டர்நேஷனல் சார்பாக விழிப்புணர்வு பதாகையை, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ், முதன்மை கல்வி அலுவலர் கணேசன் மூர்த்தி முன்னிலையில் மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் வெளியிட்டார்.
“குழந்தை நேய தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள சுமார் 800 பள்ளிகளில் இந்த விழிப்புணர்வு பதாகைகள் பள்ளிக் குழந்தைகளுக்கு குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


