தமிழக அரசின் விருது பெற்றுள்ள தூத்துக்குடி தெற்கு புதுத்தெரு மாநகராட்சி பள்ளிக்கு மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள முகநூல பதிவில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழ்நாடு தொடக்கக் கல்வித் துறையின் சார்பாக சிறந்த பள்ளிக்களுக்கான 2023-24 விருது தூத்துக்குடி தெற்கு புதுத்தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு கிடைத்துள்ளதை எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன். இதற்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் ஆசிரியர் பெருமக்கள், மாணவச் செல்வங்கள், பெற்றோர்கள் என அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்


