தெற்கு கோனார் கோட்டை தமிழ் பாப்திஸ்து துவக்க பள்ளிக்கு தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருதினை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.
தமிழக அரசின் பள்ளி கல்வித் துறை சார்பில் ஆண்டுதோறும் குழந்தைகள் தினவிழாவில் சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. இதில் 2023-24ம் ஆண்டிற்கான தொடக்க கல்வித்துறை சார்பில் சென்னையில் நடந்த குழந்தைகள் தின விழாவில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் ஊராட்சி ஒன்றியம் தெற்கு கோனார் கோட்டை தமிழ் பாப்திஸ்து துவக்கப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருதினை தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.
விழாவில் கயத்தாறு வட்டார கல்வி அலுவலர் கணேசன், பள்ளி தாளாளர் லால்பகதூர் கென்னடி உள்பட படம் கலர் கலந்து கொண்டனர். சிறந்த பள்ளிக்கான விருதினை பெற்ற தமிழ் பாப்திஸ்து பள்ளி நிர்வாகிகளை ஊர் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பாராட்டினர்


