தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் புனித பிரகாசியம்மாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் வருடம் தோறும் செப்டம்பர் மாதம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 தினங்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.
அதே போல் இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை நடந்தது. அதைத் தொடர்ந்து கொடி பவனி நடந்தது. இதில் பங்கு மக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஊர்வலமாக வருகை தந்தனர். தொடர்ந்து கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடி மந்திரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கொடி அலங்கரிக்கப்பட்டு கொடி மரத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் மாதாவின் பாடல்கள் பாடினர்.
அதைத் தொடர்ந்து கோவிலில் சிறப்பு திருப்பலி நடந்தது. தினமும் காலையும் மாலையும் நடைபெறும் ஜெபமாலை பிராத்தையிலும், நற்கருணை ஆசிரிலும் ஏராளமான சபை மக்கள் கலந்து கொள்வார்கள்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் பவனி வருகிற 29 ஆம் தேதி நடைபெறுகிறது.


