தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் நாட்டின் 78வது சுதந்திர தின விழா, வங்கியின் தலைமை அலுவலக வளாகத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. வங்கியின் பொது மேலாளர் (கடன் வழங்கல் துறை) எஸ் நாராயணன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். விழாவில் வங்கியின் தலைமை கணக்கு அதிகாரி, பொது மேலாளர்கள், துணை மற்றும் இணை பொது மேலாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியானது தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு, 1921 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வரும் பாரம்பரியமிக்க தனியார் துறை வங்கியாகும். வங்கியானது தனது வரலாற்றில் தொடர்ந்து 102 வருடங்களாக இலாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது. வங்கியானது 565 கிளைகள் மற்றும் 12 மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றின் மூலம் நாட்டின் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் தனது விரிவாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு ஏறத்தாழ 5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது.


