கோவில்பட்டி நகர தி.மு.க. செயல்வீரா்கள் கூட்டம் வருகிற 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.
இது தொடர்பாக வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கையில், “கோவில்பட்டி நகர தி.மு.க. செயல்வீரா்கள் கூட்டம் வருகிற 11ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஆா்த்தி மஹாலில் வைத்து நகர அவைத் தலைவா் பி.எம். முனியசாமி தலைமையில், நகர துணைச் செயலாளா்கள் காளியப்பன், ச. அன்பழகன், தா.உலகராணி, நகர பொருளாளர் ராமமூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் செ.ரவீந்திரன், புஷ்பராஜ், கோ. மாரிசாமி முன்னிலையில் நடைபெற உள்ளது.
கோவில்பட்டி நகரச் செயலாளா் கா.கருணாநிதி வரவேற்புரை ஆற்றுகிறார். கூட்டத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரிமான கீதாஜீவன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். கூட்டத்தில் கழக வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.
எனவ, தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள், கோவில்பட்டி நகரத்திற்கு உட்பட்ட தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், கழக சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளா்கள், நகர கழக வார்டு செயலாளா்கள், பிரதிநிதிகள், வார்டு கழக நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளா்கள் கழக செயல்வீரா்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று தவறாது கலந்து கொள்ள கேட்டுகொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


