
தாமிரபரணி நதியின் கரைஒட்டி சுமார் 150 ஆண்டு
களுக்கு முன்பு,ஒரு மாட்டுவண்டி
செல்லும் அளவிற்கு பாதை
கிட்டதட்ட கடல்வரை விட்டுவிட்டு
இருந்திருக்கிறது.
அதற்கு ஆதாரம் கரைகளின் இருபுறங்களை ஒட்டிய
தீர்த்தக்கட்டங்களான படித்துறை
களே. ஆன்மீக ரீதியாக , நதிக்
கரைகளில் அமைந்திருக்கிற
கோயில்களுக்குச் சென்று
வழிபடவும், வயல்வெளிகளுக்கு
உரம் மற்றும் விவசாயம் சார்ந்த
பணிகளுக்காக, நதிக்கரை ஓரம்
அமைந்த மாட்டுவண்டி வழித்
தடத்தினை பயன்படுத்தி இருக்
கின்றனர், அக்கால மக்கள்.
அதோடு அக்காலத்தில், திரு
நெல்வேலியைச் சுற்றியுள்ள
பகுதிகளில் மாட்டு சந்தைகூடும்
காலங்களில்,அப்பகுதிக்கு ஆடு
மாடுகளை விற்பதற்கும், வாங்கி திருப்பிக் கொண்டுவருவதற்கும்
திருநெல்வேலிக்கு கிழக்கிலும்
மேற்கிலும் குறுக்குவழியாக (Short cut way)
நதி வழி குறுஞ்சாலைகளையே
பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.
ஊர்விட்டு ஊர்சென்று கால்நடை
களின் மேய்சலுக்காகவும் இப்
பாதைகளை பயன்படுத்தி உள்ள
னர்.பாபநாசம் மேற்குதொடர்ச்சி
மலைப் பகுதிகளில் கால்நடை
மேய்சலுக்கும் இப்பாதைகள்
பயன்பட்டு இருக்கிறது என்பதை
கிராமத்தில் மிக அதிக வயது
உடைய பெரியவர்ககளின்
வாயிலாக தெரிந்துகொள்ளலாம்
தவிர நதியில் கலக்கும் சிறு
சிறு ஓடைகளின்மேல் , மாட்டு
வண்டி போகக்கூடிய அளவிற்கு
அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட
பெரிய பாளக் கல்லால் அமைக்
கப்பட்ட பாலம் பல வெள்ளங்க
ளால் சிதிலம் அடைந்திருந்தா
லும் இன்றும் அவைகள் கம்பீர மாக பல இடங்களில் காட்சித் தருவதைக் காணலாம்.
தாமிபரணிநதியின் தென்கரை
வடகரை ஒட்டி திருநெல்வேலிக்கு
கிழக்கிலும் மேற்கிலும் தற்போது
இப்ப இருக்கிற தார்சாலைகள் ஒருகாலத்தில் மாட்டுவண்டிச்
சாலைகளாகவே இருந்திருக் கின்றன.
ஆக அக்காலத்திலே தாமிர
பரணி நதியை ஒட்டி, கடல்வரை
வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது
புலனாகிறது. அதோடு இக்கரை
யிலிருந்து எதிர் கரைக்குச்
செல்ல பரிசல், தோணி, தெப்பம்,
ஓடம், படகு, புனை, மிதவை
என இவற்றை பயன்படுத்திய
மைக்கான சான்றுகள் உள்ளன.
இதை நதிக்கரை ஓரமுள்ள ஊரின் பெயர் மூலம் தெரிந்து
கொள்ள முடியும்.
அதிக வெள்ளம், நதியோர
ஆக்கிரமிப்பு, இதர ஆக்கிரமிப்பு,
மற்ற காரணங்களால் நூறு
ஆண்டுகளுக்கு முன்பு மக்களால்
பயன்படுத்தி வந்த நதியோர
நீர்வழிப்பாதைகள் இல்லாமல்
போயின. அதை மீட்டு எடுத்தால்
தாமிரபரணிநதியை பல
இன்னல்களிலிருந்து காப்பாற்றப்படலாம்.
1. முறையான சர்வே அரசால்
செய்யப்பட்டு நதியின் உண்மை
யான அகலம்அறியப்பட்டுநெடுக பெரிய எல்லைக்கல் இட்டு பாது
காக்கப்பட வேண்டும்
2.நதிக்கரையோரம் அழிக்கப்
பட்ட சாலையினை மீட்டெடுத்து
மீண்டும் போடப்படவேண்டும்.
இதனால் எதிர்காலத்தில்
நதி காப்பற்றப்படுவதோடு மட்டு
மின்றி ஆக்கிரமிப்புகளை மக்க
ளாலாலே கண்காணிக்கப்படும்
என்ற நிலை உருவாகும்.
3. நதிக்கரைகளை அக்கிரமிக்
கப்பட்ட பகுதிகளை மீட்டெடுத்து
அந்தந்த நதியோர கிராம, நகர்
பகுதி உள்ளாட்சி அமைப்புகளி
டம்கொடுத்து , மக்களோடு குறுங் காடுகள் அமைக்கலாம். அதோடு உள்ளாட்சிக்கு வருமானம்
வரதக்க பூக்கள், காய்கறிகளை
அவ்விடத்தில் பயிரிடலாம்.
இதனால் மக்களின் வாழ்வா
தாரம் கூடும். வெள்ளக்கால
மண் அரிமானம் தடுக்கப்படும்,
மரங்களால் கரை பலப்படும். வீணே ஊருக்குள் வெள்ளம் வருவது தடுக்கப்படலாம்.
4. வருங்கால சந்ததிகள் இவ்
வகைச்சாலைகளில் சிறு வாக
னங்களில் பயணிக்கும்போது இயற்கை சூழல் பற்றிய நேரடி
அவசியங்களை , அவைகளை
காப்பாற்ற வேண்டிய அவசியத்
தையும் அவர்களால் புரிந்து
கொள்ள முடியும்.
5. கரை ஓரங்களில் ஏற்படும்
கழிவுகளை உடனுக்குடன் வாக
னங்கள் மூலம் அப்புறப்படுத்த முடியும். அதோடு நடமாட்டம் அதிகம் காரணமாக குப்பைக்
கொட்டுதலுக்கு ஒரு முடிவு கிடைக்கும்.
6. விவசாயிகள் நல்லமுறை
யில் தம் விவசாயப் பணிகளை
இக்குறுஞ்சாலைகள் மூலம் பயன் படுத்திக் கொள்வார்கள்.
தீமைகள்:
1.சாலையினால் வீடுகள் கட்டப்
படலாம். கண்டிப்பான முறையில்
நதிக்கரை ஓரங்களில் வீடுகள்
தொழிற்சாலையில், செங்கமால்
கள் இதர கட்டிடங்கள் கட்ட அனு
திக்கக் கூடாது.
2. நதிசம்பந்தமான கனிமங்
கள் கடத்தப்படலாம்.(உ-ம்) மணல்
நதியில் கிடக்கும் கூழாங்கற்கள்
இது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். காரணம் மணல்
நிலத்தடி நீர் பூமிக்குள் செல்வ
தற்கும், நீரிலுள்ள உயிரினங்
கள் வாழ்வதற்கு காரணமாகிறது நதியின் ஓட்டத்தால் ஓடுகின்ற
நீர் கூழாங்கள் கற்களில் மோதி
நீருக்கு அதிக ஆக்ஸிசனை தரு
விக்கிறது. இதனால் நீர் புத்து
ணர்ச்சி பெறுகிறது.
3. வெள்ளக்காலங்களில் நதி
வழி குறுஞ்சாலைகள் வெள்ளத் தால் பாதிக்கப்படலாம்.
அதற்கேற்ப குறுஞ்சாலை
அல்லது வழித்தடங்களை நவீன
முறையில் அமைக்க வேண்டும்
பொதுகருத்துரை…
1. தற்போது நதிக்கரையில்
பயன்படுத்தி வருகிற நதியின்
இருபக்க வண்டித்தடம்(அ)
சாலைகள் எந்தந்தப் பகுதியில்
எத்தனை கி.மீ நீளத்தில் உள்ளது
என்பதை உரிய துறைமூலம் கணக்கெடுத்து, தொடர் சாலை
அமைக்க திட்டமிடலாம்.
2. இப்படி தொலைந்து போன
சாலைகளை கண்டெடுத்து, இது
முன்னெடுத்துகுறித்து கண்ணோட்டம் செய்யும் போது
தானகவே ஆக்கிரமிப்புகள் முற்
றிலுமாக அகற்றப்படலாம். ஆறு
பற்றிய விழிப்புணர்வு மக்களி
டமே ஏற்பட்டு தெளிவுபடும்.
3. இன்னும் பல நன்மைகளைக்
கருதி தாமிரபரணி நதியின்
மேன்மைக்காக நதிக்கரை ஓரம்
இக்காலத்திற்கு ஏற்ப நவீன
சாலைகளை அமைக்கலாம்.
தொகுப்பு
கிரிக்கெட்மூர்த்தி
Asst. Director of Statistics (Rtd)
நீர்நிலைதூய்மைப்பணி
ஒருங்கிணைப்பாளர்
விக்கிரமசிங்கபுரம்