ஜோஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி 10 வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களை கனிமொழி எம்.பி பாராட்டினார். செய்துங்கநல்லூர் ஜோஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 10 வது வகுப்பு தேர்வில் மாணவிகள் இவாஞ்சலின் மற்றும் பவுசியா ஷெரின் ஆகியோர் 494 மதிப்பெண் பெற்றுள்ளார்கள். இவர்களை கனிமொழி எம்.பி தூத்துக்குடியில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து பாராட்டி சான்றிதழும் பணப்பரிசும் வழங்கினார். அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளையும் மதிப்பெண் கிடைக்க உழைத்த ஆசிரியர்கள் மற்றும் பள்ளி முதல்வரை பாராட்டினார்கள். மாணவிகளோடு தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பள்ளி முதல்வர் ஜெய்தூன்பீவி மற்றும் பலர் இருந்தனர்.



