தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் விருதுநகர் பிளாசம் டிரஸ்ட் இணைந்து காசநோயாளிகளுக்கு சத்துணவு வழங்கும் நிகழ்ச்சி இன்று (19.06.2024) வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து
டாக்டர்.அ. கிருஷ்ணஜோதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.ச.செல்வகுமார் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் திரு.அ.அப்துல் ரஹீம் ஹீரா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள்.
விருதுநகர் பிளாசம் டிரஸ்ட் சார்பில் சத்துணவு பொருட்களின் தொகுப்புகள் காசநோயாளிகளுக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.அ.கிருஷ்ணஜோதி அவர்கள்
வழங்கினார்.
பிளாசம் டிரஸ்ட் வெளிப்புற களப்பணியாளர் திருமதி.ஷோபனா அவர்கள் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை பணியாளர் திரு.வேம்பன், பிளாசம் டிரஸ்ட் வெளிப்புற களப்பணியாளர் திருமதி.சொர்னலதா, சுகாதாரத் துறை பணியாளர்கள், காசநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு, விருதுநகர் பிளாசம் டிரஸ்ட் ஆகியார்கள் இணைந்து செய்திருந்தார்கள்.


