தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள தெய்வச்செயல்புரத்தில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த தேர்தல் வாக்குறுதியான அனைத்து குடும்ப தலைவிக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தி திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக மாவட்ட செயலாளர் செந்தில்குமார் என்ற பிரபு தலைமை வகித்தார். கிளைத் தலைவர்கள் பரமசிவன், தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய நிர்வாகிகள் பாலமுருகன், ரமேஷ் பூபதி, வாழவந்தான், பிரவின், சுனில், முத்துராம், ராபின், மூர்த்தி, செந்தூர்பாண்டியன், மணிமுத்து, கணேசன் ஒன்றிய செயலாளர் செல்வி, மகளிர் அணி ஒன்றிய செயலாளர் அம்பிகா, வசந்தி, கல்பனா மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


