அனைத்துலக சதுரங்க நாள் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் வழிகாட்டலில் ஒவ்வோர் ஆண்டும் சூலை 20 ஆம் நாள் கொண்டாடப்படுகின்றது.
1924 ஆம் ஆண்டு சூலை மாதம் 20 ஆம் தேதியன்று உலகச் சதுரங்கக் கூட்டமைப்பு பாரிசு நகரில் நிறுவப்பட்டது. இந்த நாளை அனைத்துலக சதுரங்க தினமாக கொண்டாடும் யோசனையை யுனெசுகோ முன்மொழிந்தது. இதன்படி சூலை 20 ஆம் நாள் அனைத்துலக சதுரங்க நாளாக 1966 ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தேதியன்று ஐக்கிய நாடுகள் சபையும் இந்நாளை அங்கீகரித்தது.
இந்நாளில் பல்வேறு சதுரங்கப் போட்டிகள் உலகெங்கும் நடத்தப்படுகின்றன. 2013 ஆம் ஆண்டு 173 நாடுகளில் இந்நாளில் சதுரங்கப் போட்டிகள் நடைபெற்றதாக பிடே தலைவர் ஒரு நேர்காணலின் போது தெரிவித்தார்.


