தூத்துக்குடி மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்தவர்கள் அவ்வையார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உலக மகளிர் தினவிழா ஆண்டு தோறும் மார்ச் 8ல் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது தமிழக முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டிற்கான உலக மகளிர் தினவிழா 08.03.2022 ஆம் நாளான்று கொண்டாடப்படும்போது, தகுதிகள் உள்ளவர்களுக்கு அவ்வையார் விருது வழங்கப்பட உள்ளது
18 வயதுக்கு மேற்ப்பட்ட தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராக இருத்தல் வேண்டும். சமூக நலநன சார்ந்த நடவடிக்கை, மொழி, பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் பணியாற்றுவராக இருத்தல் வேண்டும். மேற்கண்ட சாதனை புரிந்த பெண்களுக்கு இவ்விருது வழங்கப்பட உள்ளது.
விருது பெறதகுதியுள்ள பெண்கள் தாங்கள் புரிந்த சாதனைகளை புத்தக வடிவ கருத்துரு தயார் செய்து, 29.12.2021 அன்று மாலை ஐந்து மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநலஅலுவலகம் மாவட்ட ஆட்சியர் வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி – 628101 போன் 0461-2325606 என்ற அலுவலக முகவரிக்கு உடனடியாக சமர்ப்பிக்ககேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.


