ஏரல் வட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளின் குறைதீர்ப்பு மற்றும் மாற்றுத்திறனாளிக்கு புதிய அட்டை வழங்குதல்,பதிவுசெய்தல் சிறப்பு முகாம் ஏரல் பஸ் நிலையம் அருகில் உள்ள ராஜம்மாள் திருமண மண்டபத்தில் நாளை [புதன்கிழமை] காலை 10 மணிக்கு ஸ்ரீ வைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி, அமிர்தராஜ் தலைமையில் நடைபெறுகிறது. திருச்செந்தூர் உதவி கலெக்டர் முன்னிலை வகிக்கின்றனர் முகாமுக்கு தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொள்கிறார்கள் ஏரல் வட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் தங்களது குறைகளை சிறப்பு முகாபில் நேரடியாக கலந்து கொண்டு தீர்வுப்பெற்றுக்கொள்ளாம். மேலும் கார்டு பெறாதவர்கள் தங்களிடம் உள்ள ஆதார் அட்டை நகல் , ரேசன் கார்டு நகல் , மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டையின் அனைத்து பக்கங்களில் நகல் கலர் ஜெராக்ஸ்., அண்மையில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் புகைப்படம் 1 ஆகியவற்றை கொண்டு வந்து முகாமில் கலந்து கொள்ளும்படி ஏரல் சமுக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தெரிவித்துள்ளார்.