இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கீழதூவல் காவல் நிலையத்திற்குட்பட்ட நீர்கோழியேந்தல் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகன்டனின் மரணத்திற்கு நீதி வேண்டும், மணிகண்டனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும், அவரது மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திய அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் இன்று ஸ்ரீவைகுண்டம் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஸ்ரீவை சுரேஷ்தேவர் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட பொதுச்செயலாளர் கால்வாய் முத்துராமலிங்கம் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் சிவராம் கார்த்திக், துரைசரவணன், உடையார் பாண்டியன், ஹரிஹரன், சீனிபாண்டியன், விஜயன், சுந்தர், வசவை கணேசன், வெள்ளதுரை, சகாயம், ஆழ்வார் மணி, அல்லாத்தபாண்டி, உலகநாதன், சேதுபதி, மகாராஜன், பாலமுருகன், வேல்முருகன், குட்டி. மற்றும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாணவர் மணிகண்டன் மரணத்திற்கு நீதி வேண்டும் என கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் அன்னராஜ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


