
ஸ்ரீவைகுண்டம் பஜாரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் முப்படை தலைமை தளபதிக்கு வீர வணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாட்டின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் வெலிங்டன் மையத்தில் நடக்க இருந்த கருத்தரங்கில் பங்கேற்க தமிழகம் வந்தார். இதற்காக பிபின் ராவத் உள்பட 14 பேருடன் கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து சரியாக மதியம் 11.47 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டது.
சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் மையம் செல்லும் வழியில் ராணுவ ஹெலிகாப்டர் காட்டேரி என்ற பகுதியில் விபத்தில் சிக்கியது. இதில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பல்வேறு தரப்பட்டவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பஜாரில் பாரதிய ஜனதா கட்சி கோட்ட பொறுப்பாளர் ராஜா தலைமையில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட ராணுவ வீரர்களுக்கு வீர வணக்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
இதில் மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட செயலாளர் சங்கர், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை தலைவர் ரமேஷ், மாவட்ட இராணுவ அணி தலைவர் கதிர், ஸ்ரீவை ஒன்றிய தலைவர் காசிராமன், பொலேரோ பெருமாள், பல்க் பெருமாள், சஞ்சய் உள்பட பலர் கலந்து கொண்டு தலைமை தளபதி கலந்து கொண்டு பிபின் ராவத் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.