ஸ்ரீவைகுண்டம் அருகே சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவர் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள தெற்கு வாழவல்லான் கிராமத்தைச் சேர்ந்தவர் கோமு மகன் மகராஜா (36). லாரி டிரைவர். 14வயது சிறுமியை மிரட்டி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளளார். இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இந்த விபரம் தெரியவரவே சிறுமியின் தாயார் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரபா போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து, மகராஜாவை கைது செய்தார்.


