தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களில் உடன்குடி ஒன்றியம் நிலத்தடி நீர் இல்லாத கருமை பகுதி ஆகும். 1980க்கு பிறகு மழை பொழிவு குறைவு போன்ற காரணங்களால் உடன்குடி ஒன்றியத்தின் நிலத்தடி நீரில் கடல் நீர் உட்புகுந்து விவசாயம் அழிந்து குடிநீர் இல்லாமல் போனதால் உடன்குடி வட்டார மக்கள் பிழைப்பை தேடி வெளியூர் செல்ல நேரிட்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் டேவிட் ஹவர் என்பவரின் ஆய்வு குறிப்பு ஒன்றை தற்செயலாக வாசித்த அடிப்படையில் எங்கள் பகுதி பெரியவர்கள் சொன்ன செவிவழி செய்தியின் படி உடன்குடி வட்டார பகுதிகளில் கூழையாறு வழித்தடம் என நீர் வழித்தடம் ஒன்று இருந்து அதில் படகு சவாரி நடந்தது என்பதையும் அறிந்தேன்.
மேலும் நீர் வழித்தடம் இல்லாமல் இங்கு நரி குளம் , இடக்குளம் , மானாட்சி குளம் , குண்டாங்கரை , சிறுகுளம் , அரப்பா தோட்டம் என்ற குளங்கள் இருப்பதையும் பத்தாங்கரை பகுதி உடன்குடி பகுதியின் நீராதார பகுதி என்பதையும் குறித்து கடந்த 2019ம் ஆண்டு எனது முகநூலில் பதிவாக எழுதி இருந்தேன்.
அதே 2019ம் ஆண்டில் நானும் பல்வேறு நண்பர்களும் இணைந்து அதற்கான நீர் வழி தடத்தை தூர்வாரும் முயற்சியில் இறங்கினோம். ஆனால் முயற்சி கை கூட வில்லை.
இந்த ஆண்டு சமுக ஆர்வலர் வள்ளி சரண் என்பவரின் தலைமையில் நடந்த குளங்கள் மீட்பு முயற்சியில் முதலில் நரிக்குளம் மீட்டெடுக்கபட்டு தற்போது இந்த குளம் 50 ஆண்டு காலம் கழித்து நிரம்பி உள்ளது.
மக்களே தாங்களாக ஒன்று சேர்ந்து பணம் திரட்டி ,படாத பாடுபட்டு உரிய அனுமதி வாங்கி குளங்களை தூர்வாரி மீட்டெடுக்க பல்வேறு சிரமங்களை கடந்து வர வேண்டி உள்ளது .
மக்களே களம் இறங்கி தூர்வாரி,
மக்களின் உழைப்பால் மீட்டெடுக்கபட்டு உள்ளது .
இதற்காக உழைத்த அத்துணை நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!


