கனமழை காரணமாக மாவட்ட ஆட்சித் தலைவர் மதியத்துக்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளார். எனவே பெற்றார்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்குச் சென்று கொட்டும் மழையில் குடை பிடித்தபடி கூட்டி வந்தனர். தினமும் காலையில் வானிலை மாற்றத்தினை கணக்கில் கொண்டு மாணவ மாணவிகளுக்குக் காலையில் விடுமுறை விடுத்திருந்தால் இதுபோன்ற அசௌகரியம் ஏற்பட்டு இருக்காது எனப் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.


