கருங்குளம் பகுதிகளில் நேற்று முன் தினம் இரவு பெய்த பலத்த மழையால் சின்னார்குளம் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது. யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன் வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதி மக்களை மீட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தார்.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் ஶ்ரீவைகுண்டம் மற்றும் கருங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக கருங்குளம் அருகே உள்ள சின்னார்குளம் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ள நீர் சூழ்ந்தது.
சின்னார்குளம் கிராமத்தில் இரண்டு வீடுகள் மழை வெள்ள நீரால் சேதமடைந்து இடிந்து விழுந்தது.
தகவலறிந்த கருங்குளம் யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன் வட்டார வளர்ச்சி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததோடு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு வெள்ளநீர் சூழ்ந்து உள்ள பகுதி மக்களைை சேரகுளம் போலீசார் ஒத்துழைப்புடன் மீட்டு தனது வாகனம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாகனத்தில் மக்களை ஏற்றி ராமானுஜம்புதூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாதுகாப்பாக தங்க வைக்க ஏற்பாடு செய்தார்.
மேலும் ஊராட்சிகளில் உள்ள பணியாளர்களை அழைத்து உடனடியாக வெள்ள நீர் வடிவதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், மண்டல துணை தாசில்தார் சிவக்குமார், கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கிய லீலா, செல்வி, சேரகுளம் எஸ் ஐ அள்ளி அரசன், வட்டார காங்கிரஸ் தலைவர் புங்கன், பஞ்சாயத்து தலைவர்கள் செந்தில் நாயகி, ரங்கன், விஏஓ ரமேஷ், ஊராட்சி செயலர்கள் சங்கத் தலைவர் சுரேஷ், கிளார்க் பாரதி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.


