சீர்திருத்த (புராட்டஸ்டன்ட்) கிறிஸ்தவம்
கிறிஸ்தவத்தின் முக்கிய பிரிவுகளில் சீர்திருத்த கிறிஸ்தவமும் ஒன்று.
ஜெர்மனியில் விட்டன்பர்க் அரண்மனை தேவாலய கதவுகளில் 95 நியாய சட்டங்களை அந்த தேவாலய போதகராக இருந்த கனம். மார்ட்டின் லூதர் அவர்கள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபையிடம் நீதி/சீர்திருத்தம் கேட்டு ஒட்டிய நாளான 31.12.1517 நாளே சீர்திருத்த கிறிஸ்தவம் தோன்றிய நாளாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
சீர்திருத்த (புராட்டஸ்டன்ட்) கிறிஸ்தவம் பிரிவதற்கு முன்பாக சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு கி.பி. 1054 இல் கிறிஸ்தவ திருச்சபையில் ஒரு பிளவு ஏற்பட்டு கிழக்கு ஐரோப்பிய திருச்சபைகள்அந்தக் காலத்தில் கிழக்கு ஐரோப்பாவுக்கு தலைமை தாங்கிய கான்ஸ்டாண்டிநோபிளை தலைமையிடமாகக் கொண்டு ஆர்த்தொடாக்ஸ் கிறிஸ்தவ திருச்சபை தோன்றியிருந்ததது.
தொடக்கம்
1770 ஆம் ஆண்டிற்கு முன்
தரங்கம்பாடி, பொறையார், தஞ்சாவூர், திருச்சியில் அநேகர் சீர்திருத்த கிறிஸ்தவத்தை ஏற்றிருந்தனர்.
தரங்கம்பாடியை மையமாகக்கொண்டு டேனிஷ் மிஷன் செய்த நற்செய்தி பணி மூலம் அவர்கள் கிறிஸ்தவத்தை ஏற்று இருந்தனர்.
அக்காலத்தில் சென்னைக்கு அடுத்து திருச்சி ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின்
முக்கிய மையமாக திகழ்ந்தது. திருச்சிக்கு வணிக சம்பந்தமாக சென்று வந்த பலர் கிறிஸ்தவத்தை ஏற்றவர்களாக திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை க்கு திரும்பியிருந்தனர்.
முதன்முதலில் திருமுழுக்கு பெற்றவர்
திருச்சி தேவாலய திருமுழுக்கு பதிவேட்டின்படி 10.08.1770 இல் திருநெல்வேலியைச் சார்ந்த இலட்சுமணன் என்ற 20 வயது வாலிபன்
ஞானப்பிரகாசம் என்ற பெயரில் திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவர் ஆகியுள்ளார்.
1771 இல் சுவார்ட்ஸ் ஐயரவர்கள் முதன்முறையாக பாளையங்கோட்டை பற்றி தனது குறிப்புகளில் கொடுக்கிறார் அதில் திருச்சியில் ஞானஸ்நானம் பெற்ற புராட்டஸ்டண்ட் கிறிஸ்தவரான சவரிமுத்துபிள்ளை என்பவர் பாளையங்கோட்டையில் உள்ள ஒரே புராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர் என குறிப்பிடுகிறார் சவரிமுத்துவின் பூர்வீகம் திருநெல்வேலி என்று கூறப்படுகிறது.
சீர்திருத்த கிறிஸ்தவப் போதகர்
தந்தை. சுவார்ட்ஸ் ஐயரவர்களின் குறிப்புகள், கடிதங்கள் இதழ்களில் (Journals) திருநெல்வேலி புராட்டஸ்டண்ட் கிறிஸ்தவம் குறித்த செய்திகளைப் பார்க்க முடிகிறது அதில் திருச்சியிலிருந்து இருநூறு மைல் தொலைவில் உள்ள திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டையில் நமது சபை உறுப்பினர்கள் வாழ்கின்றனர் என அவர் ஒரு முக்கிய குறிப்பை கொடுப்பதன் மூலம் அக்கால கட்டத்திலேயே சீர்திருத்த கிறிஸ்தவ சமூகம் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் இருந்துள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
சீர்திருத்த கிறிஸ்தவ போதகர் தந்தை. சுவார்ட்ஸ் ஐயரவர்களின் பாளையங்கோட்டை வருகையும் குளோரிந்தா அம்மாவின் திருமுழுக்கும்
1778 பிப்ரவரி மாதத்தில் தந்தை சுவார்ட்ஸ் ஐயரவர்கள் திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை வந்து சீர்திருத்த கிறிஸ்தவ திருச்சபையை பார்வையிட்டதையும் பல குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுத்ததையும் குளோரிந்தா என்ற பிராமணப் பெண் திருமுழுக்கு பெற விரும்பி முன் வந்ததையும் தனது குறிப்புகளில் குறிப்பிடுகிறார் குளோரிந்தாவிற்கு 03.03.1778 இல் அவர் திருமுழுக்கு கொடுத்த விபரங்களை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.வெஸ்டர்ன் அவர்கள் இந்த குறிப்பை கொடுத்திருக்கிறார் இதில் தந்தை பால் கடம்பவனம் அவர்கள் சற்று மாறுபடுகிறார் குளோரிந்தா அம்மையார் 25.02.1778 இல் ஞானஸ்நானம் பெற்றதாக தமது நூலில் அவர் குறிப்பிடுகிறார். என்ன பெயரில் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என சுவார்ட்ஸ் ஐயரவர்கள் கேட்கையில் குளோரிந்தா என அம்மையார் அவர்கள் கூற அதை கிளாரிந்தா என அவர் புரிந்து கொண்டு கிளாரிந்தா என்ற பெயரிலேயே ஞானஸ்தானம் கொடுத்து அந்த பெயரிலேயே ஞானஸ்நான ரிஜிஸ்டரில் பதிவு செய்கிறார்.
1779 இல் குளோரிந்தா மூலமாக திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அநேகர் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்வதை குறித்த தந்தை சுவார்ட்ஸ் ஐயர் அவர்களின் குறிப்புகளையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
குளோரிந்தாவின் தஞ்சை பயணம்
1783 டிசம்பரில் குளோரிந்தாவும் அவருடன் மேலும் இருவரும் தஞ்சாவூர் சென்று தந்தை சுவார்ட்ஸ் ஐயரவர்களை சந்தித்து திருநெல்வேலிக்கு போதகர்களை அனுப்பும்படி கேட்டுக் கொண்ட குறிப்புகளையும் நாம் பார்க்கிறோம்.
1784 ஜூலை மாதம் உபதேசிமார்கள் தந்தை சுவார்ட்ஸ் ஐயரவர்கள் மூலம் தஞ்சாவூரிலிருந்து திருநெல்வேலிக்கு அனுப்பப்பட்டார்கள்
தொடக்ககால பாளையங்கோட்டை திருச்சபையின் நிலை
தஞ்சாவூர் உபதேசியார்கள் கொடுத்த குறிப்புகளின் படி அந்த காலகட்டத்தில் பாளையங்கோட்டை திருச்சபை 51 உறுப்பினர்களை கொண்டதாக காணப்பட்டது.
1785 ஜனவரி மாதம் திருச்சிக்கு அருகில் வசித்த சத்தியநாதன் என்ற சபை ஊழியர் திருநெல்வேலி பாளையங்கோட்டைக்கு அனுப்பப்பட்டார்.
1785 ஆகஸ்ட் மாதம் தந்தை. சுவார்ட்ஸ் ஐயரவர்கள் அவர்கள் திருநெல்வேலிக்கு வருகைதந்து தேவசகாயம் என்பவரின் 12 வயது மகன் வேத நாயகத்தையும் ஊழியர் பச்சைமுத்து என்பவரின் ஏழு வயது மகனையும் தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றார்.
கனம்.சத்தியநாதன் ஐயரவர்கள, கனம்..ஜெனிக்கே ஐயரவர்கள் காலத்தில் தாமிரபரணி கரையோர சபைகள்
1790 இல் சபை ஊழியர் சத்தியநாதன் லுத்திரன் திருச்சபை முறைப்படி குருவானவராக அருட்பொழிவு பெற்றார்
அவரும் கனம் ஜெனிக்கே ஐயரவர்களும் 1791 இல் நற்செய்தி பணியாற்ற திருநெல்வேலிக்கு வருகை தந்தனர்.
1792 ஆண்டறிக்கை படி இப்பகுதியில் 400 சீர்திருத்த கிறிஸ்தவர்கள் இருந்துள்ளனர்
அக்காலத்தில் பாளையங்கோட்டை,
பத்மநாபபுரம் (பற்பநா தபுரம்),
பூவாணி ஆகிய இடங்களில் சபைகள் இருந்தது. அந்நேரம் பூவாணியில் புதிய ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
1792 செப்டம்பர் 14 இல் கனம் ஜெனிக்கே தஞ்சாவூருக்கு திரும்பிச் சென்றார் அதன்பின் 1794 மார்ச் முதல் 1795 ஜூலை வரையும் பின்னர் 1796 செப்டெம்பர் முதல் 1797 பிப்ரவரி வரையும் பாளையங்கோட்டையில் தங்கியிருந்தார். .13.02.1798 இல் சுவார்ட்ஸ் ஐயரவர்கள் மரணமடைந்தார்கள் கனம்.ஜெனிக்கே மற்றும்
கனம்.கெரிக்கே இருவரும் இணைந்து 1800 பிப்ரவரியில் மார்ச்சில் பாளையங்கோட்டை வந்து சுற்றுவட்டார சபைகளை கண்காணித்தனர் .இந்நிலையில் 10.03.1800 வ் தஞ்சாவூரில் கனம்.ஜெனிக்கே மரணமடைந்தார்.கனம்.கெரிக்கே மற்றும் கனம். சத்தியநாதன் இணைந்து 1802 செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் பாளையங்கோட்டை வந்து சுற்றுவட்டார சபைகளை கண்காணித்தனர்.
சத்தியநாதன் தேரிவட்டார கரைச்சுற்று கிராமங்கள் மையமாகக் கொண்டு பணிசெய்தார்.1805 ஆகஸ்டில் இப்பகுதியை
விட்டு வெளியேறி தஞ்சாவூரில் ஊழியத்தை தன் தொடர்ந்தார்.1803 இந்த மார்ச்சு முதல் செப்டம்பர் வரை கோலாப் ஐயரவர்கள் பாளையங்கோட்டை சுற்றுவட்டார சபைகளை
தங்கி இருந்து கவனித்தார்கள்
குளோரிந்தா அம்மையார் அவர்களின் மரணம்
1792 க்குப்பின் குளோரிந்தா அம்மையார் குறித்த குறிப்புகள் இல்லை.
தாவீது சுந்தரானந்தம் உபதேசியார் மற்றும் சாயர் சார்ந்த திருநெல்வேலி கட்சி, தஞ்சாவூர் உபதேசிமார் கட்சி என இருபிரிவாக உபதேசிமார் இருந்த நிலையில் குளோரிந்தா அவர்கள் இரு பிரிவையும் சாராது நடுநிலை வகித்தார்கள்.
.இருதரப்பும் குளோரிந்தா அம்மா மரணம் குறித்த பிற்கால குறிப்புகளைத் தரவில்லை
குளோரிந்தா அம்மா அவர்கள் திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டைக்கு இடையே பாலம் கட்டப்படாத அந்த காலத்தில் ஓர் மாலை நேரத்தில் சிந்துபூந்துறை படித்துறையில் இருந்து வண்ணார்பேட்டை படித்துறை நோக்கி ஆற்றில் கடந்த பொழுது ஆற்றில் திடீரென அதிக நீர் வந்ததின் காரணமாக அமிழ்ந்து தண்ணீருக்குள் முங்கி முங்கி வந்த நிலையில் நள்ளிரவில் வண்ணார்பேட்டையில் தற்போது பேராத்து செல்வி அம்மன் கோவில் (பேராச்சியம்மன்) அமைந்திருக்கிற கரையோரத்தில் ஒதுங்கி கிடந்ததுள்ளார்கள் என்பதை திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள மக்கள் இன்றளவும் செவிவழிச் செய்தியாக இதைக் கூறுகிறார்கள் 1804 க்கும் 1806 க்கும் இடைப்பட்ட காலத்தில் பாளையங்கோட்டையில் குருவானவர்கள், உபதேசிமார்கள் யாரும். தங்கி பணி செய்யவில்லை இக்காலம் பாளையங்கோட்டை கிறிஸ்தவ வரலாற்றில் இருண்ட காலமாகக் கருதப்படுகிறது.
குளோரிந்தா அம்மாள் அவர்கள் கரை ஒதுங்கிய வண்ணார்பேட்டை தாமிரபரணி ஆற்றங்கரையில் அடக்கம் செய்யப்பட்டார் என்றும் அவர்கள் ஏராளமானோருக்கு சாதி மத வேறுபாடின்றி நன்மை, உதவி செய்தவர்களாக இருந்தபடியால் பேராத்து செல்வி அம்மனாக பேராத்து செல்வி அம்பாளாக வழிபடப்பட்டார்கள்.
காலப்போக்கில் இந்த வரலாறு மறைக்கப்பட்டு மறக்கப்பட்ட வரலாறாக மாறிவிட்டது. குளோரிந்தா அம்மையார் அவர்களின் மரணம் 1804 க்கும் 1806 க்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்ததாக அறியமுடிகிறது.
குளோரிந்தா அம்மையார் அவர்களால் கட்டப்பட்ட தேவாலய வளாகத்தில் 1959ஆம் ஆண்டு திருநெல்வேலி பேராயர் மகாகனம் A.G.ஜெபராஜ் அவர்களது காலத்தில் உலக இரட்சகர் ஜெபக்குழு நிறுவனர் திரு. குருபாதம் சார் அவர்கள் மற்றும் அக்காலத்தில் பாலியர் சங்க ஊழியராக பணிசெய்த எழுத்தாளர் திரு.R.S. ஜேக்கப் சார் அவர்கள் ஆகியோரின் முயற்சியினால் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது. அந்த நினைவுச்சின்னம் கல்லறை வடிவத்தில் தேவாலய வளாகத்தின் வடகீழ் முனையில் அமைக்கப்பட்டது அதை கல்லறையாக எண்ணி திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள மக்கள் திருநெல்வேலி திருமண்டல சபை மக்கள் அதற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர் .
தாவீது சுந்தரானந்தம் உபதேசியாரின் பாளையங்கோட்டை வருகை
நாடார் சமூகத்தின் முதல் சீர்திருத்த கிறிஸ்தவர் என்றறியப்படும் தாவீது சுந்தரானந்தம் உபதேசியார் என்ற சின்னமுத்து 21 வயது இளைஞர் ஆக 1796 செப்டம்பரில் பாளையங்கோட்டை சபைக்கு உதவியாக அனுப்பப்பட்டார்.
இவரது தந்தை சாத்தான்குளத்தில் எடுத்து காலன்குடியிருப்பு என்ற கிராமத்தை சார்ந்தவர், தாயார் விஜயராமபுரத்தைச் சார்ந்தவர்
இளம் வயதிலேயே தந்தை தாயை இழந்த சின்னமுத்து விஜயராமபுரத்தில் இருந்த தாய்மாமன் பராமரிப்பில் இருந்தபோது அத்தையின் கொடுமை தாங்காமல் ராஜபாளையம் சென்று பின் மதுரை திண்டுக்கல் சென்று பின் தஞ்சாவூரை அடைந்தார் அங்கு ஐயர் அவர்களின் மூலமாக கிறிஸ்தவ போதனைகளை பெற்று அவரால் திருமுழுக்குப் பெற்றவராக விஜயராமபுரம் மற்றும் காலன் குடியிருப்பு திரும்பினார்.
முதலிரு சீர்திருத்த கிறிஸ்தவக் கிராமங்கள்
சத்தியநாதன் ஐயரவர்களுடன் இணைந்து 1799 இல் முதலூர் என்ற முதல் சீர்திருத்த கிறிஸ்தவ கிராமத்தை அடையல் கிராமத்தை ஒட்டி நிறுவினார்.1798 முதல் கிறிஸ்தவ நற்செய்தியை ஏற்றுக் கொண்டிருந்த
சான்பத்து கிராமத்தார்
1800 இல் முழுமையாக கிறிஸ்தவர் ஆயினர்.
1876 இல் நாசரேத்தின் தந்தை என புகழ்ந்து அழைக்கப்படும் கனம்.மர்காஷிஸ் ஐயரவர்கள் நாசரேத் குறித்து குறிப்பிடுகையில் 76 ஆண்டு ஊழியப்பலன் எனக் குறிப்பிடுவது இதை நிரூபிக்கிறது.
இரண்டாவது முழு கிறிஸ்தவ கிராமமான நாசரேத் கிராமத்தார் தங்களது கிராமத்தை 1800 – 1803 க்குட்பட்ட காலங்களில் வடக்கு முதலூர் என்றும் வாழையடி முதலூர் என அழைத்தனர்.1803 பத்திர பதிவில் வாழையடி நாசரேத்தூர் என குறிப்பிட்டனர்
1804 முதல் அக்கிராமம் நாசரேத் என அழைக்கப்படலாயிற்று.
குளோரிந்தா அம்மா காலத்து சபைகள்
நெல்லை திருச்சபையின் முதல் சீர்திருத்த கிறிஸ்தவ பெண்மணியான குளோரிந்தா அம்மையார் காலத்தில் பத்மநாபபுரம் என்ற பற்ப்பநாதபுரம் பூவாணி உக்கிரன்கோட்டை மற்றும் தேரிவிளை ஆகிய கிராமங்களில் சீர்திருத்த கிறிஸ்தவ சபைகள் காணப்பட்டது என குறிப்புகள் மூலம் அறிகிறோம் உக்கிரன்கோட்டை எனும் ஊர் பாளையங்கோட்டைக்கு மிக அருகில் இருந்து பிற்காலத்தில் அழிந்து போன ஓர் ஊர் என்று ஓர் கருத்தும்
தாமிரபரணியின் துணை நதியான சிற்றாறின் கரையோரத்தில் அமைந்துள்ள
சேகர தலைமையிடமாகக் தற்போது விளங்கும் உக்கிரங்கோட்டை கிராமமே குறிப்புகளில் குறிப்பிடப்படும் கிராமம் என மற்றொரு கருத்தும் சொல்லப்படுகிறது
வரலாற்று ஆய்வாளர்களிடையே இந்த காரியத்தில் இரு மாறுபட்ட கருத்துக்கள் உள்ளதை அப்படியே பதிவு செய்கிறோம்
தேரிவிளை கிராமமே சீர்திருத்த கிறிஸ்தவத்தை நாடார்கள் முதலில் ஏற்றுக்கொண்ட கிராமம் என்றும் அங்குள்ளவர்களே முதன்முதலில் சீர்திருத்த கிறிஸ்தவத்தை ஏற்ற நாடார்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள்.
ஆனால் அங்குள்ளவர்கள் குளோரிந்தா அம்மையார் காலத்திற்குப்பின் பின்வாங்கி போனதால் முதல் கிறிஸ்தவராக தாவீது சுந்தரானந்தம் உபதேசியாரும் முதல் கிராமமாக முதலூரும் வரலாற்றில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.
குளோரிந்தா அம்மையார் காலத்துக்குப்பின் திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை வட்டார தாமிரபரணி கரையோர சபைகளின் நிலை
குளோரிந்தா அம்மையார் காலத்துக்குப்பின் திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை வட்டார தாமிரபரணி கரையோர சபைகளை
1806 முதல் 1810 வரை கனம். ரிங்கல் தோபே ஐயரவர்களும் 1811 முதல் 1813வரை கனம் வேதநாயகம் ஐயர் அவர்களும்
1813 முதல் ஆயிரத்து 716 வரை கனம். ஆபிரகாம் ஐயரவர்களும் 1816 முதல் 1820 வரை கனம்.ஹாப்வ் ஐயரவர்களும் கவனித்து வந்தார்கள் மேற்கண்ட எவரும் குளோரிந்தா அம்மையார் அவர்களின் ஊழியம் குறித்தும்,அவர்களின் மரணம் குறித்தும் எந்தக் குறிப்புகளையும் கொடுக்கவில்லை.
கனம்.ரேனியஸ் ஐயரவர்களின் காலத்தில் (1820-1838) தாமிரபரணி கரையோர கிராமங்களில் கிறிஸ்தவம்
1820 முதல் திருநெல்வேலி அப்போஸ்தலர் என்று அழைக்கப்படும் கனம் ரேனியஸ் ஐயர் அவர்களின் நற்செய்தி பணியால் திருநெல்வேலி பாளையங்கோட்டை வட்டாரத்தில் தாமிரபரணி கரையோரங்களில்
1822 இல் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் முதன்முதலில் சபை உருவானது
1821, 1822 இல் ரேனியஸ் ஐயரவர்களால் நெல்லை-பாளை தாமிரபரணி கரையோர கிராமங்களில் கீழ்க்கண்ட ஊர்களில் பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டன
அவை ரேனியஸ் ஐயரவர்களின் 1822 ஆண்டு நிறைவு குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன அவையாவன
திருநெல்வேலி டவுன், திருநெல்வேலி-மஞ்சக்குழி,
மேலப்பாளையம்,
குறிச்சி,
C.N.கிராமம்,
தச்சநல்லூர்,
பாளையங்கோட்டை முருகன்குறிச்சி, கொப்பிடுபாளையம்,
கான்சாபுரம்,
முறப்பநாடு
கீழப்பாட்டம்.
1825 இல்
திருநெல்வேலிடவுண்,
ஆரைக்குளம்,
கீழப்பாட்டம்,
கான்சாபுரம்,
மருதூர்கரை,
முறப்பநாடு, ஆகிய ஊர்களில் ரேனியஸ் ஐயரவர்களின் நற்செய்தி பணியால் சபை உருவானது.
கீழ்ப்பாட்டம் கிராம நிலை
கீழபாட்டத்தில் கத்தோலிக்க சபை ஏற்கனவே இருந்து வந்தது. 1821 முதல் கீழபாட்டம் கத்தோலிக்க கிறித்தவர் சீர்திருத்த கிறிஸ்தவ CMS சபையில் தங்களை சேர்த்துக் கொள்ளவும் CMS பள்ளியைத் தொடங்கும்படியும் ரேனியசிடம் வேண்டி வந்தனர். ஆதலால் கீழப்பாட்டம்,
கான்சாபுரம் ஆகிய இரு கிராமங்களுக்கும் பொதுவாக முதலில் கான்சாபுரத்திலும் பின் தனியே கீழப்பாட்டத்திலும் ரேனியசால் பள்ளி தொடங்கப்பட்டது பள்ளியில் பெரியோர்களும் கல்வி கற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
பண்ணையார் ஒருவரின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறும் நோக்கில் 1823 இல் தங்களை கிறிஸ்தவத்தில் சேர்க்கும்படி கீழப்பாட்டம் கிராமத்தார் 21.04.1823 இல் ரேனியசைச் சந்தித்து வேண்டிக் கொண்டார்கள்.
கீழப்பாட்டம் கிராமத்தார் வேண்டுகோளை ரேனியஸ் ஏற்றுக் கொண்டார்.
பேராயர் சார்ஜென்ட் அவர்களது குருத்துவ காலத்தில் உருவான நெல்லை பாளை வட்டார – தாமிரபரணி கரையோர கிராம சபைகள்
பாளையஞ்செட்டிகுளம்,
மேலக்குளம்.
மணக்காடு
செய்துங்கநல்லூர் ஆகிய சபைகள் பேராயர் சார்ஜன்ட் அவர்களது குருத்துவ காலத்தில் நடைபெற்ற நற்செய்திப் பணிகளின் மூலம் தொடங்கப்பட்டவை ஆகும்.
தாமிரபரணி ஆற்றில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள
நாஞ்சான்குளம்
தென்கலம்
ஆகிய இரு கிராமங்களும் பேராயர் சார்ஜன்ட் அவர்களது குருத்துவ காலத்தில் நடைபெற்ற நற்செயஇருநத பணிகளின் மூலம் தொடங்கப்பட்டவை ஆகும்
காலாங்கரை
பேராயர் சார்ஜன்ட் அவர்கள் பேராயராக இருநத காலத்தில் நடைபெற்ற நற்செய்திப் பணிகளின் மூலம் தொடங்கப்பட்டது.
1890 க்குப் பின்னர் தொடங்கப்பட்ட நெல்லை பாளை வட்டார தாமிரபரணி கரையோர கிராம சீர்திருத்த கிறிஸ்தவ சபைகள்
மணப்படைவீடு,
பாப்பையாபுரம்,
பொட்டல்,
பர்கிட்மாநகரம்
, ராஜவல்லிபுரம் மேலூர்,
ராஜவல்லிபுரம் கீழூர்,
கட்டளை,
தோணித்துறை,
ஸ்ரீராமன் குளம்,
ஆனையார்குளம்
பக்கப்பட்டி,
சேதுராமலிங்கபுரம்,
வல்லநாடு,
கோனார்குளம் ஆகிய கிராமங்களில் 1890 க்குப் பின்னர் சீர்திருத்த கிறிஸ்தவ சபைகள் உருவானது


