கன்னியாகுமரி மாவட்ட அன்பு வனம், தமிழ்நாடு பேச்சாளர் நலச்சங்கம், நாஞ்சில் கலையரங்கம் இணைந்து வழங்கும் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை மற்றும் தொல்லியல் அறிஞர் விருது &2021 எழுத்தாளர் , ஆய்வாளர் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு வழங்கப்பட்டது. சாமித் தோப்பு அன்பு வனத்தில் வைத்து நடந்த இந்த விழாவில் சாமித் தோப்பு குரு மகா சன்னிதானம் பாலபிரஜாதிபதி அடிகளார் வழங்கினார். அ.கா. பெருமாள் . டமுத்ரா ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது. அன்பு வனம் நிர்வாகி டாக்டர் தர்ம ரஜினி, , தமிழ்நாடு பேச்சாளர் நலச்சங்கம் செயலாளர் வசந்த சுயம்பு, நாஞ்சில் கலையரங்கம் ஈஸ்வரன், கவிஞர் கை. சீத்தாராமன் , நிகழ்ச்சி தொகுப்பாளினி விஜி , பேராசிரியர் பாஸ்ரீ, பேராசிரியர் வேல்முருகன் , நாட்டார் குளம் எஸ்.கே.திருப்பதி, சுடலைமணி செல்வன், நியூஸ் 7 செய்தி வாசிப்பாளர் தம்பி கோபாலகிருஷ்ணன், தமிழ் அறிஞர் சரலூர் ஜெகன், ஓவியர் கோபால்ஜி உள்படப் பலர் கலந்துகொண்டனர்.
&&


